tg travels

கள்ளக் காதலியின் மறுப்பை தாங்க முடியாமல் 40 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை.


கள்ளக் காதலி வரமறுப்பு குடும்பஸ்தர் தீமூட்டி தற்கொலை

கள்ளக் காதலி மறுப்பு தெரிவித்ததால் தனக்குதானே தீமூட்டிக்கொண்ட ஒருவர் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவ யோகியான பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குணதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணமானவரான இவர் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர்அவர்தொழில்புரியும் ஓடு உற்பத்திநிலையமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் 2.0 மணிக்கு இவர் கள்ளக் காதலி தொழில் புரியும் ஓடு உற்பத்தி நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.


அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தநிலையில் அந்த இடத்திலேயே அவர் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவ்விடத்தில் இருந்தவர்கள் அவரை மாரவில ஆதார வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மாலை 6மணியளவில்சிச்ெசை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக் காதலியின் மறுப்பை தாங்க முடியாமல் 40 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை. கள்ளக் காதலியின் மறுப்பை தாங்க முடியாமல்  40 வயது  குடும்பஸ்தர் தனக்குத்தானே  தீ மூட்டி தற்கொலை. Reviewed by Madawala News on 8/26/2017 12:36:00 PM Rating: 5