Kidny

Kidny

சிறிய தந்தையால் அடித்து துன்புறுத்தப்பட்ட 4 வயது சிறுவன். மனைவியின் முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே அடி.


வவுனியா - குருமன்காடு பகுதியில், சிறிய தந்தையால் அடித்து துன்புறுத்தி காயங்களுக்குள்ளான 4 வயது சிறுவன், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தொடர்ச்சியாக குறித்த சிறுவன் குறித்த நபரால் அடித்து துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த நிலையில், நேற்று (22) மாலை, அச்சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 வவுனியா - குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இவ்வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில், அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். குறித்த பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவன் உள்ளான். குறித்த சிறுவனையே அப்பெண்ணின் 2ஆவது கணவன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

 குறித்த நபர், அச்சிறுவனை பார்க்கும் போது, முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாகக் கூறியே, அச்சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர், இதனை அவதானித்து, குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளார்.

இதையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிஸார், சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சிறுவனை தாக்கிய சிறிய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.  

சிறிய தந்தையால் அடித்து துன்புறுத்தப்பட்ட 4 வயது சிறுவன். மனைவியின் முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே அடி. சிறிய தந்தையால் அடித்து துன்புறுத்தப்பட்ட 4 வயது சிறுவன்.  மனைவியின் முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே அடி. Reviewed by Madawala News on 8/23/2017 11:17:00 PM Rating: 5