tg travels

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் ஓப்பனர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

 
- Hassim Mohammed Naleem-
சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

"பாகிஸ்தான் சூப்பர் லீக்" கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்ற இதன் 2வது போட்டித் தொடரில் ‘இஸ்லாமாபாத் யுனைட்டட்’ அணியில் பங்கேற்று விளையாடிய சர்ஜீல் கான் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

பெஷாவர் ஸல்மி அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், அவுட் ஆகி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 10ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்ஜீல் கானை பாகிஸ்தான் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. 

அவர் மீதான புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவில் விசாரணை நடந்து வந்த நிலையில் 28 வயதான சர்ஜீல் கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தற்காலிகமாக நீக்கப்பட்ட தினத்தில் இருந்து இத்தடை அமலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

இவர் பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும், 25 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 15 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் ஓப்பனர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் ஓப்பனர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on 8/30/2017 04:50:00 PM Rating: 5