Ad Space avaiable

(கள வீடியோ இணைப்பு) விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த பல இரத்தினக்கற்கள் அடங்கிய புராதன சிலை 55 கோடி ரூபா விற்பனை முறியடிப்பு.


விலைமதிக்க முடியாத சிவப்பு நீல நிற இரத்தினக்கல் பதிக்கப்பட்ட புராதன சிலையொன்று டன் கூடிய கருங்கல்லிலான புராதன (சைத்திய) கோபுரமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் ஒரு வரையும் முச்சக்கர வண்டி யொன்றின் சாரதியையும் பாணந்துரை ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய் துள்ளனர்.

சுமார் 21 கிலோ எடையுள்ள இந்த புராதன சிலைக்குள் பெறுமதி வாய்ந்த
மேலும் பல இரத்தினக்கற்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

எம்பிலிபிட்டிய சந்திரிகாவெவ குளத்துக்கருகில் நேற்று முன்தினம் (2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள் துெ. விலை மதிக்க முடியாத புராதன சிலையொன் றை வெளிநாட்டவரொருவருக்கு ஒருவர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைத்த தகவலொன்றையடுத்து இப்பிரிவின் அதிகாரிகள் தந்திரோபாயமான முறையில் நடவடிக் இதற்கமைய பாணந்துரை ஊழல் மோசடிப்பிரி வின் அதிகாரியொருரை ஒரு பெளத்த பிக்குவின் வேடத்தில் நடிக்க செய்து சந்தேக நபரான முன்னாள் கடற்படை வீரர் ஏற்க னவே தரகர் ஒருவர் மூலமாக வெளி நாட்டவர் ஒருவருக்கு 50 கோடி ரூபா வுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இந்த விலைமதிக்க முடியாத பொரு ளை 55 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியுள்ளார்.

 இதனையடுத்து இவ்விலைக்கு சிலையை விற் பனை செய்ய சந்தேக நபர் இணங்கியதைய டுத்து இவ் வியாபாரத்தை நடத்தும் தோரணையில் அதிகாரிகள் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ..
(கள வீடியோ இணைப்பு) விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த பல இரத்தினக்கற்கள் அடங்கிய புராதன சிலை 55 கோடி ரூபா விற்பனை முறியடிப்பு. (கள வீடியோ இணைப்பு) விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த பல இரத்தினக்கற்கள் அடங்கிய புராதன சிலை 55 கோடி ரூபா விற்பனை முறியடிப்பு. Reviewed by Madawala News on 8/04/2017 09:03:00 AM Rating: 5