Kidny

Kidny

நேற்று மாலையே முடிவடைந்த மேலதிக 600 ஹஜ் கோட்டாக்கள் (விசாக்கள்) .


-ஏ.ஆர்.ஏ. பரீல் - 

சவூதி அரேபிய ஹஜ் அமைச்சினால் இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட மேலதிக 600 ஹஜ் கோட்டாக் களும் (விசாக்கள்) நேற்று மாலை பூரணப்படுத்தப்பட்டது.

 நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களூடாக பயணிகள் நேற்று தம்மைப் பதிவு செய்து கொண்டனர்.

ஹஜ் கட்டணமாக 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா முதல் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை ஹஜ் முகவர்களால் அறவிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ காரங்கள் அமைச்சருமான எம்.எச்.ஏ. ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம். பாஹிம் கருத்து தெரிவிக் கையில்,

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மேலும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இறுதி நேரத்தில் இலங்கைக்கு 600 ஹஜ் விசாக்கள் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பாக்கியமாகும்.

மேலதிக 600 ஹஜ் பயணிகளும் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் பயணிக்க  உள்ளார்கள்.

அதற்கான ஏற்பாடுகளை அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலு வல்கள் திணைக்களமும் மேற்கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவில் மக்கா, மதீனா அஸிஸியாவில் இவர்களுக்கான தங்கு மிட வசதிகள் தற்போது சவூதியிலுள்ள இலங்கை ஹஜ் முகவர்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இதேவேளை, என்.எம் டிரவல்ஸ் ஹஜ் முகவர்நிலைய உரிமையாளர் எம்.எஸ். எச். முஹம்மட் கருத்து தெரிவிக்கையில்:

நல்லெண்ணத்தின் அடிப்படையில் 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கட்டனத்தில் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் பூரணப்ப டுத்தப்பட்டுள்ளன.

600க்கும் மேற்பட்ட வர்கள் இம்முறை மேலதிக கோட்டாவில் பயணிக்க முன்வந்துள்ளார்கள்.

எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 3.15 மணிக்கு சவூதி அரேபியா விமான சேவையின் விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நேற்று மாலையே முடிவடைந்த மேலதிக 600 ஹஜ் கோட்டாக்கள் (விசாக்கள்) . நேற்று மாலையே முடிவடைந்த மேலதிக 600 ஹஜ் கோட்டாக்கள் (விசாக்கள்) . Reviewed by Madawala News on 8/24/2017 08:53:00 AM Rating: 5