Ad Space Available here

பாடசாலை சிறுமியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 64 வயது பெளத்த பிக்கு சிறையில் அடைப்பு.


தாயும் தந்தையும் தொழிலுக்கு சென்றிருந்த வேளை ஒன்பது வயது இளம் பராயமுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரில் கைதான 64 வயதுடைய பெளத்த பிக்கு ஒருவரை அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராத புரம் பிரதான மஜிஸ்திரேட் மேலதிக மாவட்ட நீதவான் கே.பி.சாணக்க ஹர்சன உத்தர விட்டுள்ளார்.


சிறுமி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி வைத்திய அறிக்கை வழங்கியுள்ளார். இச்சிறுமி அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசா லையொன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கிறார்.


தந்தை யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் கடமை புரிவதுடன் தாய் கொழும்பி லுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமை புரிந்து வருகின்றார். என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பெளத்த பிக்கு கடந்த 26 ஆம் திகதி விகாரைக்கு முன்னால் அமர்ந் திருந்த இச்சிறுமியை உணவு உண்பதற்காக அழைத்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் இன்னும் சில சிறுவர்களும் உணவு உண்டு கொண்டிருந்ததாக வும், அவர்களை அனுப்பி விட்டு பெளத்த பிக்கு இச்சிறு மிக்கு உணவை வழங்கிவிட்டு அறையொன்றுக்கு அழைத்துச் சென்று ரூபா 300 பணத்தை யும் கொடுத்து கடுமையான முறையில் பாலியல் துஷ்பிர யோகம் மேற்கொண்டுள்ளார் .

இதனை யாரிடமும் கூற வேண்டாம். அப்படி கூறினால் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.


இதன் பின்னர் பாதிக்கப் பட்ட சிறுமி பக்கத்து வீட்டு யுவதியிடம் நடந்த சம்பவங் களை கூறியுள்ளார்.

இதன் பின்னர் இது சம்பந்த மாக பொலிசில் தெரிவிக்கப் பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரான பிக்கு கைது செய் யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தியதாவும் பொலிஸார் தெரி வித்தனர்.

பாடசாலை சிறுமியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 64 வயது பெளத்த பிக்கு சிறையில் அடைப்பு. பாடசாலை சிறுமியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 64 வயது பெளத்த பிக்கு சிறையில் அடைப்பு. Reviewed by Madawala News on 8/30/2017 08:35:00 AM Rating: 5