tg travels

பேராதனைப் பலகலைக்கழக 81 - 82 மாணவர் குழுவின் ‘பாடுமீன் இரவு’ நிகழ்வுகள் மட்டக்களப்பில்.


-ஜே.எம்.ஹபீஸ்-

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 81-82 மாணவர் குழுவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் நடை பெற உள்ளது.

1981-82ம் ஆண்டு மாணவர்களாகப் பதிவு செய்து 1984ம் ஆண்டு வெனியேறிய கலைப்பீட தமிழ் மொழி மூல மாணவர்களது மேற்படி ஒன்று கூடல் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் மாலை 5 மணிக்கு நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாலாவிய ரீதியில் பங்கு கொள்ளும் மேற்படி குழுவின் சகல பழைய மாணவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்குமான இவ் ஒன்று கூடல் மிக விமரிசையாக இடம் பெற ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு சார்பாக செல்வி ரோகினி கந்தையா தெரிவித்தார்.


எனவே கலைப்பீடத்தில்லிருந்து 1984ம் ஆண்டு வெனியான சகல தமிழ் மொழி மூல முன்னாள் மாணவ மாணவிகளும்  இதில் கலந்து கொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலை பேசி இலக்கத்துடன் தொடாபுகொள்ளும் படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொலை பேசி இலக்கம் 071 4968501
கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் அதற்கு முந்திய வருடம் கின்னியாவிலும் நடை பெற்றது.

பேராதனைப் பலகலைக்கழக 81 - 82 மாணவர் குழுவின் ‘பாடுமீன் இரவு’ நிகழ்வுகள் மட்டக்களப்பில். பேராதனைப் பலகலைக்கழக 81 - 82 மாணவர் குழுவின்  ‘பாடுமீன் இரவு’ நிகழ்வுகள் மட்டக்களப்பில். Reviewed by Madawala News on 8/03/2017 03:05:00 PM Rating: 5