tg travels

சாதாரண தரம்கூட சித்தியடையாத 96 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள்.


ஐக்கிய தேசியக் கட்சி,  ஸ்ரீலங்கா கதந்திரக் கட்சி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 225 உறுப்பினர்கள் அடங்கிய இலங்கைப் பாராளுமன்றத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கூட தேர்ச்சி பெறாத 96 உறுப்பினர்கள் தற்போது உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை ஊவா மாகாண சபை யில் உறுப்பினராக உள்ள மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சமந்த வித்தியாரத்ன பதுளையில் நடந்த அரசாங்க கல்விச்சேவை ஊழியர்கள் சங்கத்தின் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

 இதுபற்றி அவர் மேலும் அங்கு கூறுகையில்,

இவ்வாறு குறைந்தபட்ச கல்வியறிவுகூட இல்லாதவர்கள் இலங்கையின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளது அவர்களின் தவறா அல்லது மக்களின் தவறா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களில் ஒரு பகுதியினர் அவ்வாறான அரசியல்வாதிகள் வழங்கும் கூரைத்தகடுகளுக்கும் மண்வெட்டிக ளுக்கும் சாப்பாட்டு பார்சல்களுக்கும்மயங்கி ஓட்டு வழங்குவதாலேயே இந்நிலை ஏற்படுகிறது.

 மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் செயற்படுவதற்கும் மக்களுக்கு சேவை தகைமை கூட இல்லாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகும்நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ள தகவல்களுக்கு ஏற்ப இலங்கையின் பாராளுமன்றத்தில் மொத்தஉறுப்பினர்களில் 40 வீதத்துக்கும் மேற்பட்டோர் கல்வியில் சாதாரண தரத் தகைமை கூட இல்லாதவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சாதாரண தரம்கூட சித்தியடையாத 96 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள். சாதாரண தரம்கூட சித்தியடையாத 96 பேர்  பாராளுமன்ற உறுப்பினர்கள். Reviewed by Madawala News on 8/09/2017 02:07:00 PM Rating: 5