Kidny

Kidny

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது..


ஹஸ்பர் ஏ ஹலீம்

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது இதனால் யாருடைய கரங்களில் எந்த அரசியல் தலைமையின் கையில் பணம் பரிமாற்றப்பட்டதோ தெரியாது மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது.பறிபோன பின்னரும் அரசியல் யாப்பு திருத்தம் பற்றி எமது அரசியல் தலைமை பேசிக்கொண்டு இருக்கப்போகிறதா?என திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் தெரிவித்தார்.

நேற்று 7ம் திகதி மாலை திருகோணமலை சன்சென் ஹோட்டலில் இடம் பெற்ற திருமலை நவத்தின் இராவண தேசம் நூல் வெளியீட்டு நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடரந்து அவர் தனது உரையில் நாம் எனது மக்களைக்காக்க மண்ணைக் காக்க எமது சமயம் கலை கலாச்சாரம் பண்பாடு சம்பிரதாயம் மொழியைக்காக்க என்ன செய்கின்றோம்?அரச அரசியல் சமூக சமய தலைமைகளின் பணி என்ன? இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு மக்கள் நலன் காக்க அரசியல் யாப்பு உண்டு உள்ளுராட்சித் தோர்தல்கள் மாகாணசபை தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல்கள் என்று காலத்திற்கு காலம் வருகின்றது.

நாம் எமக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுக்கின்றோமா? அல்லது அற்பனிப்போடு மக்கள் பணியை முன்னிருத்தி செய்பவர்களை தேர்ந்தெடுக்கின்றோமா? கடந்த தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள் நம்பிக்கையோடு வாக்களித்தார்கள் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டாலும் தமது உரிமை வாழ்வு மண் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக வாக்களித்தார்கள் அதிகாரம் கொடுக்கப்பட்டது.என்ன நடந்நது.மக்களுக்கு தேவை இருக்கின்றன தம்மால் பெற்றுக்கொள்ள முடியாதவைகளை மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கின்றது.

நம்பினார்கள் வாக்களித்தார்கள் வரவேற்றார்கள் இறுதியில் பெற்றதை விட இழந்தது தான் அதிகம் தேர்தல் வருகிறது பதவியும் வருகிறது அதன் பின் தேர்தல் வராது என்று இருந்து விட்டால் அது மடத்தனம் மக்கள் விழித்துவிட்டார்கள் இனியும் ஏமாற ஆயத்தம் இல்லை இனியும் இழக்கக் கூடாது என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அற்பணிப்போடு மக்கள் நலம் சார்ந்து பணியாற்றுபவர்களை நம்புவோம் முன்னிருத்துவோம் எமது எதிர்காலமாவது நிம்மதி நிறைந்தாக மகிழ்ச்சி நிறைந்தாக அமையட்டும் என தமது உரையில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் தெரிவித்தார்.

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது.. கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது.. Reviewed by Madawala News on 8/08/2017 10:50:00 AM Rating: 5