Kidny

Kidny

இந்திய அணி போட்டியில் வென்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அகில தனஞ்சயனின் கவலை.


கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருதை வென் றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான்.

காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹத் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட் விராட் கோஹ்லி, ராகுல் பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது.


இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் சாமர கபுகெதர (40) மற்றும் மிலிந்த சிறிவர்தன (58) ஜோடியின் அபார ஆட்டத் தினால் இலங்கை அணி இந்த ஒட்ட எண்ணிக்கையை எட்டியது.

இந்திய அணி களமிறங்கும் நேரம்பார்த்து மழை குறுக்கிட் டதால், இந்திய அணிக்கு 47 ஓவர் களில் 231 ஓட்டங்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஜோடியாக ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்
இருவரும் இலங்கையின் பந்து வீச்சை அடித்து ஆடினர். இதனால் அணியின் ஓட்ட வேகம் அதிகரித்தது.

15 ஓவர்களில் இந்தியா 100 ஓட்டங் களைக் கடந்தது. அதிரடி யாக ஆடிய ரோஹித், 58 ஓட்டங் களை பெற்றார். அவருடன் ஆடிய ஷிகர் தவான் ஒரு ஓட் டத்தினால் அரைச் சதத்தை தவறவிட்டார்.

அவரை தொடர்ந்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை. அதன்பின்னர், இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி இந்திய அணியினரின் விக்கெட்டுகளை கைப்பற் றினர்.

குறிப்பாக, இலங்கை அணியின் அகில தனஞ்சய தனது மாயாஜால சுழற்பந்து வீச்சில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார்.

 இத்துடன் போட்டி இலங்கைப் பக்கம் சரிந்து விட்டது என்றே அனைவரும் கருதினர். அப்படி எண்ணுவ தற்கான கள நிலைவரம்தான் அப்போது இருந்தது. காரணம் 109 ஓட்டங்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடிவந்த இந்தியா, 131 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

இன்னும் 100 ஓட்டங்கள்தான் மூன்று விக்கெட்டுக்கள்தான் வீழ்த்திவிடலாம் என்று நினைத்த இலங்கைக்கு பேரிடியாக அமைந் து டோனி மற்றும் புவனேஷ்வர் . ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் டோனியும், புவனேஷ்வர் குமாரும் போராட்டத்தை தொடர்ந்தனர்.


இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளை யாடி இலக்கை எட்டியது. புவனேஷ்வர் குமார் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் அரைச் சதம் கடந்தார். டோனி 45 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஜோடி 100 ஓட்டங் களை இணைப்பாட்டமாக பெற்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 45ஆவது ஒவரில் இந் தியா 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும்கூட ஒட் டுமொத்த ரசிகர்களின் பார்வையும் இருந்தது அகில தனஞ்சய மீதுதான் அனைவரும் அவரை கவலையுடன்தான் பார்த்தனர்.


காரணம் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தி அதுவும் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இலங்கை அணியால்
வெற்றிபெற முடியாமல் போய்விட் டதே என்பதுதான்.

இத்தனைக்கும் அகில தனஞ்சய நேற்றுமுன்தினம்தான் இரவு 11 மணியளவில் கண்டி வந்தடைந்துள்ளார். காரணம் நேற்றுமுன் தினம் காலையில்தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தன்று தான்  அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்பிறகே அவர் உடனடியாக போட்டி நடைபெறும் கண்டி பல்லேகல பகுதிக்கு வந்தடைந்துள்ளார் இந்தப் போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருதை அகில தனஞ்சயதான் வென்றார்.

ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அவர் பேசுகையில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த் தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தோற்றுவிட்டோமே என்ற கவலை அதைவிடவும் இருக்கி றது.

வென்றிருந்தால் மகிழ்ச்சியாக சென்றிருப்பேன். நேற்றுதான் கடந்த புதன்கிழமை) நான் திருமண பந்தத்தில் இணைந்தேன். திருமண வைபவம் முடிந்தவுடன் நான் போட்டியில் பங்கேற்க இங்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி முடித்தார் சோகமாக நேற்றைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய அகில தனஞ்சய தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் சிறப்புற வாழ நாமும் வாழ்த்துகிறோம்.

இந்திய அணி போட்டியில் வென்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அகில தனஞ்சயனின் கவலை. இந்திய அணி போட்டியில்  வென்றிருந்தாலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அகில தனஞ்சயனின் கவலை. Reviewed by Madawala News on 8/25/2017 02:27:00 PM Rating: 5