Kidny

Kidny

மூலதன இருப்பில் 4.75 பில்லியன் ரூபாவை ஈட்டிய அமானா வங்கி.


அமானா வங்கியின் உரிமை வழங்கல் (Rights issue) மேலதிக கொள்வனவுடன் நிறைவுபெற்றது. இதனால், மூலதன இருப்பில் மேலும் 4.75 பில்லியன் ரூபாவை ஈட்ட வங்கியால் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மூலதனத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அமானா வங்கி, 380 ரூபா முகப்பெறுமதியுடன் கூடிய 1250.695,267 பங்குகளை புதிதாக விநியோகித்துள்ளது.

ஒவ்வொரு சாதாரண பங்கை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இந்தப் பங்குகள் வழங் கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய மூலதன உள்ளீர்ப்பைத் தொடர்ந்து வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட 10 பில்லியன் ரூபா மூலதனத் தேவையை மிகவும் இலகு வாக ஈட்ட முடிந்துள்ளது.

இதன்மூலம், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையும் கால அவகாசத்திற்கு முன்பாகவே 10 பில்லியன் ரூபா என்ற ஒழுங்குபடுத்தல் நிதித் தேவைப் பாட்டை வங்கி பூர்த்தி செய்துள்ளது என      மேலும்    தெரிவிக்கபடுகிறது.
 
உரிமை பங்குகளை பெற்றுள்ள இஸ்லாமிய வங்கித்துறை வளர்ச்சி நிதியம் (IBGF) அதன் தீர்மானமிக்க மூல நிறுவனமான இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியுடன் (DB) சேர்ந்து அமானா வங்கியில் உள்ள தமது பங்கு வீதத்தை 299 சதவீதமளவிற்கு அதிகரித்துள்ளது.

இலங்கையானது இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் ஓர் உறுப்பு நாடாக
இல்லாத போதிலும், அமானா வங்கியின் எதிர்காலம், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் தொடர்பில் வைத்துள்ள வலுவான நம்பிக்கையை இது காட்டுகின்றது.

 இஸ்லாமிய வங்கித்துறை வளர்ச்சி நிதியம் (IBGF) மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங் களுக்கு மேலதிகமாக பல உள்நாட்டு வெளிநாட்டு பங்குதாரர்களும் உரிமை பங்குகளை பெறுவதற்கு முன்வந் துள்ளனர்.

இதன் காரணமாக உரிமை வழங்கல் மேலதிக கொள்வனவுடன் நிறைவுபெற்றது. இந்த வெற்றிகரமான உரிமை வழங்கல் தொடர்பில் கருத்து வெளி யிட்டுள்ள அமானா வங்கியின் தலைவர் ஒஸ்மான் காஸிம் "வங்கியின் உரிமை வழங்கலை கொள்வனவு செய்வதற்காக மிகையான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளமை அமானா வங் கியின் பயணத்தில் எமது பங்குதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது.

உண்மையில் அவர்கள் வழங்கும் ஆதரவையும் அர்ப்பணிப் பையும் நாம் கெளரவமாக கருதும் அதே வேளை, இதற்காக நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த மூல தன அதிகரிப்பானது வங்கியை மேலும் உயரச் செய்வதற்கு துணைபுரியும்" எனக் குறிப்பிட்டார்.


இதேவேளை, வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் கருத்து வெளியிடுகையில்,

" 2015 ஆம் ஆண்டில் இலாபமீட்ட ஆரம்பித்ததிலிருந்து புதிய மூலதனம் உள்வரத் தொடங்கியுள்ளது.

தற்போது வங்கி ஐந்து வருட மூலோபாயத் திட் டத்திற்கிணைவாக அதன் விஸ்தரிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லும் அளவிற்கு ஒரு வலுவான ஆரோக்கியமான நிலையில் உள்ளது எமது எதிர்காலம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு கூடுதலாகவே இருக்கின் றது. எமது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் பிரவேசிக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய சவாலை வெற்றிகொள்ளலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு" என தெரிவித்தார்.

 வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி அமானா வங்கி என அவர்கள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூலதன இருப்பில் 4.75 பில்லியன் ரூபாவை ஈட்டிய அமானா வங்கி. மூலதன இருப்பில் 4.75 பில்லியன் ரூபாவை ஈட்டிய அமானா வங்கி. Reviewed by Madawala News on 8/04/2017 02:22:00 PM Rating: 5