tg travels

இலங்கை அணிக்கு கிடைத்த 'ஜோன்டி ரொட்ஸ்' . இந்திய அணியினரும் புகழ்ந்து தள்ளினர்.


தென்னாபிரிக்காவின் மிகச்சிறந்த களத் தடுப்பு வீரரான ஜோன்டிரொட்ஸ் போல் இலங்கை அணிக்கு சிறந்த இளம் களத்த டுப்பு வீரர் ஒருவர் கிடைத்துள்ளார்.

காலி சென் அலோசியஸ் கல்லூரி மான வனான அசேன் பண்டார என்ற 18 வயது வீரர் தற்போது இலங்கை அணிக்கு கிடைத்துள்ளார்.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட் டியில் அசேல குணரட்ன கையில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக அசேன் பண்டார களமிறங்கி அற்புதமாக களத்தடுப்பு செய்தார்.

இவரது களத்தடுப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட் டியுள்ளதுடன், இந்திய அணியினரும் இவரது களத்தடுப்பு திறமை குறித்து புகழ்ந்துள்ள அதேவேளை, இலங்கை அணி முகாமைத் துவமும் இவரது களத்த டுப்பு திறமையை அடை யாளம் கண்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஒரு காலத்தில் ஜோன்டி ரொட்ஸ் மிக அற்புத களத்
தடுப்பாளராகத் திகழ்ந்தார்.

 அவரைப்போல் அசேன் பண்டாரவின் திறமையும் இருப்பதாக அணி முகா மையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இவர், இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்துள்ள அதேவேளை, தேசிய அணியிலும் நிரந்தர இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சிறந்த சுழல் பந்து வீச்சளராக விளங்கும் இவர் துடுப்பாட்டத்திலும் குறிப் பிடத்தக்காவுக்கு சிறப்பாக ஆடுவதாகவும் ( பாடசாலை போட்டியொன்றில் அற்புதமாக துடுப்பெடுத்தாடிய அஷேன் பண்டார ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைக் குவித்ததும் உள்ளார் ) தெரிவித்த குருசிங்க, இவரை டெஸ்ட் அணியில் பயன்படுத்துவது குறித்து தற்போது ஆராயப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு கிடைத்த 'ஜோன்டி ரொட்ஸ்' . இந்திய அணியினரும் புகழ்ந்து தள்ளினர். இலங்கை அணிக்கு கிடைத்த 'ஜோன்டி ரொட்ஸ்' . இந்திய அணியினரும் புகழ்ந்து தள்ளினர். Reviewed by Madawala News on 8/01/2017 11:48:00 AM Rating: 5