Ad Space avaiable

ஆயிஷாவாக மாறிய ஆதிரா : பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியா கேரளாவில் இஸ்லாம் மத கோட்பாடுகளால் உந்தப்பட்டு ஆயிஷாவாக தன்னை மதம் மாற்றிக் கொண்ட ஆதிராவுக்கு துன்புறுத்தல் எதுவும் கொடுக்கக் கூடாது என்று ஆதிராவின் பெற்றோருக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அரசு கல்லூரி முதுகலை மாணவியான ஆதிரா கடந்த ஜூலை 10 ஆம் தேதி 15 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அதில் தான் இஸ்லாம் மத கோட்பாடுகளால் உந்தப்பட்டுள்ளதால் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் அதற்கு எதிர்ப்பு இருக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆதிராவின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதில் ஆதிரா லவ் ஜிஹாத் கும்பலால் கடத்தபட்டிருக்கக் கூடும் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் கேரள நீதிமன்றத்தில் ஆஜரான ஆதிரா, தன் பெயர் ஆயிஷா என்றும், இஸ்லாம் மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும், நீதிமன்றத்தில் கூறினார். மேலும் தான் எந்த அமைப்பிலும் இணையவில்லை என்றும் தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. நான் பல வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்து இந்த முடிவை எடுத்ததாகவும், அவர் தெரிவித்தார். மேலும் தன்னை யாரும் வற்புறுத்தி இஸ்லாம் மதத்தை ஏற்க சொல்லவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

அதேவேளை பெற்றோரை தொடர்ந்து விரும்புவதாகவும் அவர்கள் எனக்கு எந்த தொல்லையும் கொடுக்காத பட்சத்தில் அவர்களுடன் செல்வேன் ஆனால் என் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கோ அல்லது எந்தவித வற்புறுத்தலோ, துன்புறுத்தலோ செய்யக்கூடாது என்றும் அவர் நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்தார்.

இதனை அடுத்து கேரள நீதிமன்றம் ஆயிஷாவை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதித்தது. மேலும் அவரை எந்த விதத்திலும் வற்புறுத்தவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் ஆயிஷாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஆயிஷாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆயிஷாவுக்கு எந்த வித துன்புறுத்தலும் கொடுக்க மாட்டோம் என்று உத்திரவாதம் கொடுத்ததை அடுத்து ஆயிஷா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆயிஷா(ஆதிரா), "நான் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துவிட்டதாகவும், லவ் ஜிஹாதுக்கு கட்டுப் பட்டுவிட்டதாக்வும், வெளிநாடு சென்றுவிட்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டு எழுந்தது. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை அப்படியிருக்க எப்படி வெளிநாடு செல்ல இயலும். நான் விரும்பியே இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தேன் யாருடைய வற்புறுத்தலும் எனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
ஆயிஷாவாக மாறிய ஆதிரா : பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு. ஆயிஷாவாக மாறிய ஆதிரா : பெற்றோரிடம் இருந்து  பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு. Reviewed by Madawala News on 8/02/2017 06:35:00 AM Rating: 5