tg travels

வரலாற்றில் முதன்முறையாக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து ஒஸ்மானை வாங்கியது பார்சிலோனா .


பார்சிலோனா கால்பந்து கழக அணி, தங்களது அதிக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து டார்ட் மண்ட் வீரரை ஒப் பந்தம் செய்துள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் உள்ள 20 முன்னணி கால் பந்து கழக அணிகளுக்கிடையே நடைபெறும் தொடர் லா லிகா, இதில் தலைசிறந்த அணியாக பார்சிலோனா விளங்குகிறது.

2016-17 தொடரில் 2ஆவது இடத்தைப் பிடித்தது. இந்த அணியில் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இடம்பி டித்திருந்தனர். இதனால் பார்சி லோனா அணி வேறு வீரர்களை ஒப்பந்தம் செய்
வதில் ஆர்வம் காட்டவில்லை.

திடீரென பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கழகமான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் நெய்மரை வாங்கியது. எனவே நெய்மர் இழப்பை சரிக்கட்ட ஜெர்மனி கால் பந்து கழகமான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்ஜ வாங்க பார்சிலோனா அந்த அணி யுடன் பேசியது.

முதலில் 105 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதை பொருசியா டார்ட்மண்ட் ஏற்கவில்லை. இந்நிலையில் 145 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதற்கு பொருசியா டார்ட் மண்ட் சம்மதம் தெரிவித்தது.

இதனால் ஒஸ்மான் பார்சி லோனா அணிக்கு வருவது உறு தியாகியுள்ளது. பார்சிலோனா கழகம் தனது வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை.

வரலாற்றில் முதன்முறையாக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து ஒஸ்மானை வாங்கியது பார்சிலோனா . வரலாற்றில் முதன்முறையாக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து ஒஸ்மானை வாங்கியது பார்சிலோனா . Reviewed by Madawala News on 8/30/2017 11:21:00 AM Rating: 5