Ad Space Available here

தாய்ப்பாலும் தாய்ப்பாலூட்டலும்.. வைத்தியரின் பார்வையில் சிறப்பு கட்டுரை.


குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் தாய்ப்பாலை விட மிக சிறந்த ஆகாரம் வேறொன்றும் இல்லை.குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும் (Exclusively Breast Feeding)வழங்க வேண்டும்.பின் வேறு உணவுகளுடன் தாய்ப்பாலை குழந்தையின் இரண்டு வயது வரை தொடர வேண்டும்.

தாய்ப்பால் மற்றைய ஏனைய பால் வகைகளுடன் (Formula Milk )உடன் ஒப்பிடும் போது

  -குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியவசியம் தேவையான அமினோ அமிலங்கள்(Cystine,Taurine),Linoleic Acid போன்ற கொழுப்புகள் ,தேவையான கனியுப்புகள்(K,Cl,Ca,PO4)போன்றவை போதியளவு காணப்படுகிறது.

 -Casein போன்ற புரதங்கள் மிக குறைவு.இதனால் மற்றைய மற்றைய பால்களை போன்று intolerance பிரச்சனைஇல்லை.

 -இதைவிட தாய்ப்பால்
  •எந்தவித முன் ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
  •மிக இலகுவானதும் சுலபமானதும்(More Convenient )
  •பழுதடையாதது
  •எவ்வித செலவுமில்லை

 -ஒவ்வாமை பிரச்சனை இல்லை(Allergy)
 -குடிக்கும்/உறிஞ்சும் பிரச்சனைகள் இல்லை(Suckling Problems)
 
தாய்ப்பாலானது தன்னகத்தே எவ்வித கிருமிகளையும் கொண்டிராது.இதனால் கிருமிகளினால் ஏற்படுத்தப்படுகின்ற வயிற்றோட்டம்(Diarrhea)சுவாச தொற்று நோய்(Respiratory Infection)போன்றவை மிக குறைவு.இதை விட தாய்ப்பால் குழந்தையையும் தாயையும் சிறந்த முறையில் இணைப்பை(Bond)ஏற்படுத்த உதவுகிறது.இதனால் ஆரம்பத்திலிருந்தே தாய்க்கும் குழந்தைக்கும் இடையே சிறந்த உறவு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் Formula Milk தாய்ப்பாலுடன் ஒப்பிடும் போது Vitamin A போதியளவு காணப்படததுடன் Formula Milk மூலம் சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல்(Constipation),அதிக உடற்பருமன்(Obese) போன்றவையும் ஏற்படுகின்றன.


தாய்ப்பாலினது உள்ளடக்கமானது(Composition of Breast Milk)
  -குழந்தையின் வயதிற்கேற்ப
  -ஒவ்வொரு தாய்ப்பாலுக்கும் இடையில்
  -ஒரு தரம் கொடுக்க ஆரம்பிக்கும் போதும்,முடிவடையும் போது
  -ஒவ்வொரு நாளின் நேரத்திற்கு அமைய
  வித்தியாசப்படும்.


குழந்தை கிடைத்து முதல் ஓரிரு நாட்களுக்கு தாயின் மார்பில் இருந்து வெளியேற்றப்படும் பால் 'COLOSTRUM'என அழைக்கப்படும்.இது மஞ்சள் நிறமாகவும் சாதாரண தாய்ப்பாலை விட அடர்த்தி கூடியதாகவும் இருக்கும்.இதை சில தாய்மார் குழந்தைகளுக்கு கொடுக்காமல் விடுகின்றனர்.இது முற்றிலும் தவறாகும்.இப்பால்(Colostrum) குழந்தைகளுக்குறிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நிர்ப்பீடன பொறிமுறையை தூண்டுகிறது.இதைவிட இப்பாலானது ஆரம்பமாக குழந்தையின் உணவுக்கால்வாய் தொகுதி குறிப்பாக சிறுகுடலின் முதிர்ச்சியை ஏற்படுத்த உதவும்.

இன்றைய காலங்களில் குழந்தை கிடைத்து முதல் நாள்/ஒரு சில நாட்களில் பெரும்பாலான தாய்மார்களினால் சொல்லப்படுவது தமக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவு அல்லது இல்லை.முன்னைய காலங்களில் தாய்மார்கள் கர்ப்ப காலங்களிலும்,குழந்தை கிடைத்த பின்னும் தேவையான முறையான உணவுகளை உண்டு தமக்குறிய வேலைகளை செய்தார்கள்.இதனால் இவ்வாரன பிரச்சனைகள் ஏற்பட்டது மிக மிக குறைவு.இதை விட தாய் எந்தளவு மனதளவில் உளவியல் ரீதியாக(Psychologically)தனக்கு போதிய தாய்ப்பால் உள்ளதாக கருதுகின்ற போது இதன் மூலம் பால் சுரப்பதற்குறிய மேலதிக ஓமோன்கள் சுரக்கப்படுகின்றன.இக்காலத்தில் பல பெண்கள்
   -தமக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவு/இல்லை என தாங்களே முடிவு எடுப்பதுடன் இதை மனதளவில் பதிக்கிறார்கள்.

   -Formula Milk கொடுப்பதை Fashion ஆக கருதுவதோடு Formula Milkகளின் பெயர்களை சொல்லி இவ்வளவு விலை என பெருமையாக பேசுகிறார்கள்(கணவன் கூலி தொழில் செய்து தினம் வருமானம் 500/= இருந்தாலும் 1500/= பால்மாவை ஆர்வத்துடன் வாங்க முயற்சிப்பவர்கள் பலரை சமூகத்தில் பரவலாக காணலாம்)

  -தாய்ப்பால் ஊட்டலை தரம் குறைவாக எண்ணல்/மற்ற பெண்களின் முன் தாய்ப்பாலூட்டலை கௌரவ குறைவாக எண்ணல்.
 -தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தமது அழகு குறைந்து விடும் என அஞ்சுதல்.
என சமூகத்தில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாரான தாய்ப்பால் சுரப்பது குறைவு/இல்லை என Formula Milk ஐ எதிர்பார்க்கும் பல தாய்மார்களை வைத்தியசாலையில் சிறுவர் விடுதியில்(Children Ward)

ஒரு சில மணித்தியாலங்கள் அணுமதிக்கப்படும்.இதன்போது தாய்ப்பால் சம்பந்தமான மேற்பார்வை செய்யப்பட்டு முறையான சோதனை செய்யப்படும்.இங்கு பெரும்பாலான தாய்மார்களில் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை வைத்திருக்கும் நிலை(Position),தாயின் மார்புடன் குழந்தை இணைந்திருக்கும் தன்மை(Attachment)போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளாக அமையும்.இதன் போது பெரும்பாலன தாய்மார்களில் போதியளவு தாய்ப்பால் சுரப்பது அறியப்படுத்தப்படும்.பின் தாய்க்கு இது சம்பந்தமாக தெளிவூட்டப்பட்டு/திருத்தப்பட்டு பூரண மன நிறைவுடன் வீடு செல்வாள்.தாயின் மனநிறைவுடன் குழந்தை முறையான Position,Attachment உடன் குழந்தை மார்பகத்தை Suckling செய்யும் போது சிறப்பான ஓமோன் தூண்டுதலுடன் போதியளவு தாய்ப்பால் சுரக்கின்றன.


இதை தவிர சில பெண்களில் மார்பக முலைக்காம்புகளில்(Nipples)ஏற்படுகின்ற Inverted/Flat/Absent Nipples,Cracked Nipples,மற்றும் மார்பக வீக்கம்(Engorgement of Breast),நோவுள்ள மார்பகங்கள்(Painful Breast)போன்ற பிரச்சனைகளும் அடையாளப்படுத்தப்படும்.

வைத்தியசாலை சிறுவர் விடுதி எனது பல வருட அணுபவத்தில் இதுவரை இதுபோன்று(தாய்ப்பால் போதாமை/இல்லை)அணுமதிக்கப்பட்ட பல தாய்களில் ஒரேயொரு தாய்க்கு மாத்திரமே தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் இல்லாததாக கண்டறியப்பட்டுள்ளது.


தமது விருப்பத்திற்கு ஏற்ப/முறையான வைத்திய பரிசோதனையின்றி (குழந்தையும் தாயையும் முறையாக சோதித்து தாய்ப்பால் சுரப்பது குறைவு/இல்லை என உறுதிப்படுத்தப்படல்)Formula Milk கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.இது தவறாகும்.இதனால் வீண் செலவுடன் குழந்தைகளுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.பாமஸி,கடைகளில் வைத்தியரின் ஆலோசனையின்றி தமது விருப்பத்திற்கு அமைய ஆறு மாதத்திற்குள்ளான பிள்ளைகளுக்குறிய பால் மா விற்பது குற்றமாகும்.


தாய்ப்பாலுட்டல் சம்பந்தமாக கர்ப்ப காலத்தின் போதும்,குழந்தை கிடைத்து வைத்தியசாலையை விட்டு வெளியேறும் முன்னும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.இதைவிட பல வைத்தியசாலைகளில் Lactation Management Centre அமைக்கப்பட்டு தாய்ப்பாலூட்டல் தெளிவுபடுத்தப்படுகிறது.மேலும் அரசாங்கம் Maternity Leave -Full pay leave(84 வேலை நாற்கள்),half pay leave,no pay Leave என தாய்ப்பாலை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.இதைவிட குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்கு முன் அலுவலகம் செல்வோருக்கு Feeding time என இதற்காக ஒரு மணித்தியாளம் வழங்கப்படுகிறது.தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் இது போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு சலுகைகளை வழங்கும் படி அரசு பணித்துள்ளது.


சுகாதார அமைச்சு Consumer Affairs Authority உடன் இணைந்து பல சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துகிறது.இவை Formula Milk ஐ தாய்ப்பாலுக்கு நிகராக பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தல்,குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு முன் Complementary Feedings சம்பந்தமான உணவுகளை அறிமுகப்படுத்தல்/விளம்பரம் செய்தல்,அரச வைத்தியசாலை,சுகாதார நிலையங்களில் Formula Milk,Complementary Feeding சம்பந்தமான புகைப்படங்களை காட்சிக்கு வைத்தல்,மேற்படி நிறுவனங்களுக்கு இவற்றை அன்பளிப்பாக/குறைந்த விலை/free sample என்ற முறையில் வழங்குதல்.......போன்றவை குற்றங்களாக கருதப்படுகின்றன.

தாய்பால் வழங்குவதன் மூலம் தாய்க்கு
  -பிரசவத்தின் பின்னான மேலதிக இரத்தம் வெளியேறுதல் குறைக்கப்படும்/நிறுத்தப்படும்.
 -பிரசவத்தின் பின் பெண் மீண்டும் அவளது பழைய உடல் கட்டமைப்பை பெறுவதுடன் தேக ஆரோக்கியம் அடைகிறாள்.
 -குறிப்பிட்ட காலத்திற்கு இயற்கையான கருத்தடை முறையாக அமைகின்றது.
 -மார்பு புற்றுநோய்(Breast Cancer),சூலக புற்று நோய்(Ovarian Cancer) ஏற்படும் நிகழ்தகவு குறைக்கப்படுகிறது.

தாய்ப்பால் வழங்காமல் இருக்கும் போது மேலதிக பால் மார்பில் சேகரிக்கப்படுவதனால் பால் கட்டியாகி மார்புகளில் தாங்க முடியாத வலியை உணருவார்கள்.இது பெண்களால் உணரப்படும் மற்றுமொரு வேதனையான வலியாகும்.

இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலும் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கட்டாயம் வழங்க வேண்டும்.இறைவன் அல்குர்ஆனில் கூறும்போது
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢ என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (குர்ஆன் 31:14)
மற்றும்

இவ்வசனத்தில் (2:233) தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

குழந்தை பிறந்து அடுத்த குழந்தைகளுக்கிடையில் ஆகக் குறைந்தது இரு வருட இடைவெளி இருக்க வேண்டும்.இதன்போது பாதுகாப்பான முறைகளையும் தாண்டி கர்ப்பம் தரிக்க வாய்ப்புக்கள் உள்ளதால் சில கருத்தடை முறைகள் வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.இதை சில இஸ்லாமிய குடும்பங்கள் மார்க்கம் என்ற பெயரில் முறையான மார்க்கம் தெரியாமல் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எவ்வித கருத்தடை முறையை பாவிக்காது அடுத்த பிள்ளையை முதல் பிள்ளைக்கு ஒரு வயது உள்ள வயிற்றில் சுமக்கின்றனர்.இதனால் குறிப்பிட்ட கர்ப்ப காலத்தில் பின் தாய்ப்பால் கொடுப்பது வயிற்றிலுள்ள பிள்ளையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.குறிப்பிட்ட கர்ப்ப காலத்தின் பின் இப்பால் சுரத்தலும் நிறுத்தப்படுவதால் இது ஏற்கனவே உள்ள குழந்தைக்கு செய்யும் அநியாயம் ஆகும்.கர்ப்பத்திலுள்ள குழந்தை கிடைத்த பின் சுரக்கப்படுகின்ற தாய்ப்பாலை சிலர் மேற்படி இரு பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றனர்.இப்பால் ஏற்கனவே உள்ள குழந்தையின் வயதிற்கு பொறுத்தமானதாக அமையாது.தயவு செய்து மார்க்கத்தையும் மருத்துவத்தையும் தெளிவாக விளங்கி கொள்ளுங்கள்.எனவே தாயப்பாலை இரண்டு வயது வரைக்கும் தொடர்வது மார்க்க,மருத்துவ ரீதியில் அவசியமாகும்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.

தாய்ப்பாலும் தாய்ப்பாலூட்டலும்.. வைத்தியரின் பார்வையில் சிறப்பு கட்டுரை. தாய்ப்பாலும் தாய்ப்பாலூட்டலும்.. வைத்தியரின் பார்வையில் சிறப்பு கட்டுரை. Reviewed by Madawala News on 8/19/2017 11:05:00 PM Rating: 5