Kidny

Kidny

கண்ணீரை வரவழைத்த சம்பவம்... தந்தையின் பிரேதத்துக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு பரீட்சை எழுத சென்ற சிறுமி.


இறந்த தனது தந்தையின் பிரேதம் வீட்டில் இருக்கையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதச் சென்ற சிறுமி. தந்தையின் சடலத்துக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு பரீட்சை எழுதச் சென்றுள்ளார்.

இச்சோகமயமான சம்பவம் நேற்று (20) எம்பிலிப்பிட்டிய விகாரகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலையில் புற்று நோய் காரண மாக சிறுமியின் தந்தை கடந்த (18) மரணமடைந்துள்ளார்.

சிறுமியின் தந்தை இறந்து இரண்டு நாளாகையில்
நேற்றும் கிராம மக்களின் அஞ்ச லிக்காக பிரேதம் வீட்டில் வைக் கப்பட்டி ருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (20) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய நிலை இச்சிறுமிக்கு ஏற்பட்டது. உரிய நேரம் வந்ததும் பரீட் சைக்கு செல்ல தயா ரான சிறுமி,

தனது தாயின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டார். அதன் பின்தந்தையின் பிரேதத்துக்கு அருகில் சென்ற சிறுமி தந்தையே சென்று வருகிறேன்" எனக் கூறி கண்ணிருடன் ஆசி கேட்ட போது அங்கி ருந்த அனைவர் கண்களிலும் நீர் கசிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கண்ணீரை வரவழைத்த சம்பவம்... தந்தையின் பிரேதத்துக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு பரீட்சை எழுத சென்ற சிறுமி. கண்ணீரை வரவழைத்த சம்பவம்... தந்தையின் பிரேதத்துக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு பரீட்சை எழுத சென்ற சிறுமி. Reviewed by Madawala News on 8/21/2017 09:22:00 AM Rating: 5