Kidny

Kidny

இன்றைய திகதியில் நாட்டின் மொத்த கடன் கடன் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா +


கடன்களுக்கு என்ன நடந்தது என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.
 கடன் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாவை தாண்டியுள்ளது என்கிறது ஜே.வி.பி.

இலங்கையின் இன்றைய கடன் தொகை 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாவை தாண்டியுள்ளது.

இதுவரை வாங்கிய கடன் தொகை என்னானது என்பதை முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிகழ்கால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளதை அடுத்து இலங்கையின் கடன் மேலும் 44 கோடியாக அதிகரித்துள்ளது. குறைந்த பட்சம் ரூபாவின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார். இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாடு இன்று பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை எவ்வாறு மீட்டு இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் மீட்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

இன்று எமது நாடு மிகப்பெரிய கடன் நெருக் கடியில் உள்ளது. இன்று எமது நாட்டின் கடன் தொகை 10 இலட் சத்து 50 ஆயிரம் கோடியையும் தாண்டியுள்ளது. 1985 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை வாங்கிய கடன் தொகை எங்கே போயுள்ளது.

 முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, ஜே.ஆர். ஆகியோர் இறந்து விட்டனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான சந் திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிகழ்கால ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன ஆகியோர் இந்த கடன்களுக்கான உண்மையான கார ணிகளை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர் மாணிக்க 14 ஆயிரம் கோடி செலவாகி யது,
அதிவேக பாதை நிர்மாணிக்க 8 ஆயிரம் கோடி செலவாகியது.
கட்டுநாயக்க விமா னநிலையத்தை மீள் நிர்மாணிக்க 7 ஆயிரத்து 500 கோடி செலவாகியது.
மத்தள விமான நிலையம் உருவாக்க 3 ஆயிரத்து 500 கோடி செலவாகியது. நுரைச் சோலை அனல்மின் நிலையம் உருவாக்க 7 ஆயிரம் கோடி செலவாகியது.
இவை அனைத்தையும் உருவாக்க 40 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. ஆனால் இந்த ஆட் சியாளர்கள் இந்த நாட்டினை 10 இலட் சத்து 50 ஆயிரம் கோடி கடனாளியாக மாற்றியது எவ்வாறு? இலங்கையின் முழு வருமானமும் கடன் களை செலுத்த போதுமாக இல்லை.


வட்டியை மட்டுமே நாம் செலுத்த வேண்டிய நிலைமை உள் ளது. இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டினைக் கடனாளி நாடாக மாற்றியுள்ளனர். பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கடைப் பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையின் மூலமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. நாடு சுதந் திரம் அடைந்து 70 ஆண்டுகளின் பின்னரும் இந்த நாடு அடிமை நாடாக உள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி இல்லாத நாடாக உள்ளது என்றால் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் எவ்வாறு நம்ப முடியும். இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

 இதன் காரணமாகவே இலங்கையின் கடன் 44 கோடியாக அதி கரித்துள்ளது. குறைந்த பட்சம் ரூபாவின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத் தினால் முன்னெடுக்கப்படவில்லை. எமது ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

நாம் இறக்குமதிக்காக இரண்டு மடங்கு செலவு செய்கின்றோம். இவற்றை மாற்றியமைக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டின் பொருளா தாரத்தை பலப்படுத்த இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றார்.

இன்றைய திகதியில் நாட்டின் மொத்த கடன் கடன் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா + இன்றைய திகதியில் நாட்டின் மொத்த கடன் கடன் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா + Reviewed by Madawala News on 8/17/2017 11:44:00 AM Rating: 5