Ad Space avaiable

அவதானம் | கொழும்பில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு... கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் போலியாக விற்பனை.


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் பலவற்றில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகளாக்க போலி காணி உறுதிகளை தயாரித்து விற்பனை செய்த பாரிய அளவிலான மோசடி வர்த்தகம் ஒன்றினை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு கண்டுபி
டித்துள்ளது.

இவ்வியாபாரத்தை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் கெப்டன் ஒருவர் உட்பட சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு மோசடி விசாரனைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ரொஹான் பிரேமரத்ன வின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்  போது பாரிய காணி மோசடி வலையமைப்பின் தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டு அது தொடர்பான எட்டு சந்தேக நபர்க ளையும் அவர்களால் மோசடியாக விற்கப்பட் டதாக சந்தேகிக்கப்படும் 50க்கும் அதிகமான காணிகளின் போலி உறுதிப்பத்திரங்களையும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங் களையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

கொழும்பு டெய்சி வில்லா பிரதேசத்தில் எட்டு கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி உடைய காணியை விற்க முற்பட்ட வேளையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த காணிக்கு மாத்திரம் போலியான மூன்று உறுதி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந் துள்ளது.

கண்டி கட்டுகஸ்தோட்டையில் வசிப்பவரான இவ்வியாபாரத்தின் பிரதான நபரான இராணுவ கெப்டனுடன் ஏனைய சந்தேக நபர்கள் இணைந்து இவ்வாறு பல பிரதேசங்க ளில் காணிகளை விற்பனை செய்துள்ளர்கள். அவரினதும் அவரின் ம தவியாளர்களினதும் மோட்டார் வண்டிகளிலிருந்து பெருந்தொகை
யான காணி உறுதிப்பத்திரங்கள் மீட்கப்பட்டுள் .


காணிஉறுதிகளைதயாரிக்கப் பயன்படுத்திய விசேட தாள்களையும், காணிகள் தொடர்பான காணி அறிக்கைகள், உறுதிக்காக பயன்படுத்தப் படும் முத்திரை உள்ளிட்ட பல பொருட்களை சந்தேகநபரின் வீட்டிலிருந்து பொலிஸார் கண்டு   பிடித்துள்ளார்கள்.

கொழும்பு டெய்சிவில்லா பிரதேச காணிக்கு போலி உறுதியை தயாரித்து அந்த காணியை காணிஉரிமையாளர்ஒன்றரைகோடி ரூபாவுக்கு விற்றுள்ளதாக போலியாக தயாரித்து அதை பதிவு செய்ய முற்பட்டபோது காணிப் பதிவு காரியாலயபதிவாளரால் மிகவும் பெறுமதியான அந்த இடத்தை மிகவும் குறைந்த விலைக்கு விற்பதையிட்டு சந்தேகம் கொண்டால் பதிவு செய்யாமல் அது குறித்து ஆராய்ந்த போது உண்மை தெரிய வந்துள்ளது.

பின்னர் அக்காணி உரிமையாளர்கள் கொழும்பு மோசடி விசாரணைப் பதிவுக்கு முறைப்பாடு செய்துள் ளார்கள்.

 அதன்பின்விசாரணை மேற்கொண்ட
அவர்கள்  போலிகாணி விற்பனை தொடர்பான விபரங்களை கண்டுபிடித்துள்ளார்கள்.


இவ்வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் கள் வவுனியா, யாழ்ப்பாணம், வத்தளை போன்ற பிரதேசங்களில் வசிப்பவர் களாவார்கள்.

பிரதான சந்தேக நபரின் மனைவி கண்டி கச்சேரியில் பணிபுரிவதாகவும் ( உறுதிப்பத்திரம் செய்யும் ஆவண மாதிரிக்கு உதவ...)  கூறப்படுகின்றது.

ஏற்கனவே சந்தேக நபர் மீது பல வழக்குகள் போலியாக உறுதிப்பத்திரம் தயாரித்ததற்காக பல நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் அதிபர் லலித் பதிநாயகவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அதிகாரி ரொஹான் பிே மதாஸவின் கண்காணிப்பின் கீழ் கொழும்பு மோசடிப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர்க ளான கஸ்தூரி சிங்க, சமன் திஸானந்த மற்றும் தினேஷ் சந்திரசிறி, பொலிஸ் காண்ஸ்டன், வான சிசிர, ருவான், பிரியதர்ஷன ஆகியோர் இச் சுற்றிவளைப்பின் பங்குகொண்டார்கள். சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத் தபடவிருந்தார்கள்.

அவதானம் | கொழும்பில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு... கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் போலியாக விற்பனை. அவதானம் | கொழும்பில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு...  கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் போலியாக விற்பனை. Reviewed by Madawala News on 8/01/2017 08:54:00 AM Rating: 5