Yahya

தன்னை கடவுள் என கூறிக்கொண்டு 40 பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியுள்ள குர்மீத் ராம் சாமியாரின் கதை.


"தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைமை ஆசிரமம் ஹரியானா மாநிலம், சிர்ஸாவில் அமைந்துள்ளது.

இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் கடந்த 2002 இல் அன்றைய பிரதமர் வாஜ்பாய், பஞ்சாப் ஹரியானா தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் அவர் தனது கண்ணீர் கதையை விவரித்திருந்தார். "நான் பஞ்சாப்பை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பத்தின் பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன்.

ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் சிங் வசித்தார். ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அறைக் கதவைத் திறந்த போது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார்.

தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாச படம் ஒடிக் கொண்டிருந்தது. அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன்.

அப்போது அவர், என்னை தனக்கு விருப்பமான பெண் துறவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார்.

அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற் புறுத்தினார். நான் மறுப்புத் தெரிவித்தேன். 'கடவுள்' என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப் பினேன். அ

தற்குப் பதிலளித்த அவர், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்க ளோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்றார்.

அவரது விளக்கத்தை நான் ஏற்காததால் என்னை மிரட்டத் தொடங்கி
னார். ஆசைக்கு இணங்காவிட்டால் என்னையும் எனது குடும்பத்தின ரையும் ஆசிரமத்தில் இருந்து தூக்கி எறிவேன் என்று அச்சுறுத்தினார்.

அதன் பின்னர் என்னை வலுக்கட் டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல, என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம்
செய்தார்.


அவர்களில் பலர் திருமண வயதைக் கடந்தவர்கள். அவர்களால் ஆசிரமத்தை விட்டு தப்பிச் செல்ல முடியவில்லை. அவரது விருப்பத்துக்கு இணங்காத பெண்களை துன்புறுத்துகின்றனர்.


40 பெண்கள் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகி உள்ளனர். எனது பெயரை பகிரங்கமாகக் குறிப்பிட்டால் நான் கொல்லப்ப டுவது உறுதி. எனக்கும் பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் உண்மையை கூறத் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்" இவ்வாறு பெண்துறவி தனது கடி தத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் உயர் நீதி மன்றம் தானாக முன்வந்து வழக் குப் பதிவு செய்தது.

15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் குர்மீத் ராம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னை கடவுளாக கூறி பெண்களை பலாத் காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

 2 பெண்களின் சாட்சியம்தான் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்ப டுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் இருவரும் குர்மீத் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட் சியம் அளித்துள்ளனர்.

குர்மீத் ராம் எப்படி எல்லாம் பெண்களை தனது வலையில் சிக்க வைத்தார் என்பதை அவர்கள் நீதிபதியிடம் விபரித்துள்ளனர். சிர்சா நகரைச் சேர்ந்த மற்றொரு பெண் 2010ம் ஆண்டு செப்டம் பர் 9ம் திகதி நீதிபதியிடம் கூறிய போது, "1998ம் ஆண்டு ஜூன் மாதம் ஆசிரமத்தில் சேர்ந்தேன். 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதத் தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்னை அவரது அறையில் பலாத்காரம் செய்தார்" என்றார். ஆசிரமத்தில் உள்ள பாதாள அறையில்தான் குர்மீத் ராம் தங்கி வந்துள்ளார். அந்த அறைக்கு பெண் சீடர்களை மட்டுமே பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.


தன்னை கடவுள் என்றே கூறிக் கொண்டு, பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

குர்மீத் ராம் புகழ் பெற்ற ஆன்மி கத் தலைவராக விளங்கியதாலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவரை மிகவும் மதித்ததாலும்தான் ஏராளமான பெண்கள் அந்த ஆசிர மத்தில் தங்க முன்வந்தனர்.

இரகசிய வார்த்தை மன்னிப்பு:அளித்தவர்களில் ஒருவர் ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர். இவர் 2009 ம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி சிபிஐ நீதிபதி ஏ.கே.வர்மா முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.


அப்போது அவர் கூறும் போது, "1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆசிரமத்தில் தங்கினேன். அப்போது, ஆசிரமத்தில் பெண் சீடர்கள், மன்னிப்பு' என்ற வார்த்தையை இரகசிய குறியீடாக பயன் படுத்தி வந்தனர்.

என்னிடமும், "பிதாஜி மன்னிப்பு கிடைத்து விட்டதா என்று பெண் சீடர்கள் கேட்டனர். அப்போது அதற்கான அர்த்தம் தெரியவில்லை. ஆகஸ்ட் 28ம் திகதி குர்மீத் என்னை அவரது அறைக்கு அழைத்து பலாத்காரம் செய்த போதுதான் மன்னிப்பு என்பதற்கான அர்த்தம் புரிந்தது" என்றார்.
தன்னை கடவுள் என கூறிக்கொண்டு 40 பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியுள்ள குர்மீத் ராம் சாமியாரின் கதை. தன்னை கடவுள் என கூறிக்கொண்டு 40 பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியுள்ள  குர்மீத் ராம் சாமியாரின் கதை. Reviewed by Madawala News on 8/28/2017 11:12:00 AM Rating: 5