Kidny

Kidny

தகவல் தொடர்பு, தொழிநுட்ப அதிகாரியாக தரமுயர்த்தப்பட்ட கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் S.M.ஹலீம்.


எமது கலாவெவ  முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு.S.M.ஹலீம் 2017.07.05 ம் திகதி முதல் வடமத்திய மாகாண தகவல் தொடர்பு மற்றும் தொழிநுட்ப அதிகாரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

இந்நியமனமானது தகவல் தொடர்பு மற்றும் தொழிநுட்ப சேவைகளுக்கு உள்ளீர்ந்ததும் நிறைவேற்றுத் தரமும் (Executive Grade) கொண்ட ஒரு நியமனமாகும்.(ICTS அதாவது  SLAS,SLEAS,SLAGS,SLPS,SLSS போன்ற சேவை  ).


இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில்  கணணி விஞ்ஞான இளமாணி (Bsc in CS) , தகவல் தொழிநுட்ப பட்டப்பின் டிப்ளோமா(PGDip in IT)  மற்றும் கணணி விஞ்ஞான முதுமாணி (Msc in CS)  பட்டங்களை பெற்றவர்.அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கணணி விஞ்ஞான உதவி விரிவுரையாளராகவும் பின்னர் Turnkey Computer System இல் கணணி வன்பொருள் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவராவார்.


மென்பொருள் உற்பத்தித்துறையில் தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு கணணி மயமாக்கல் மென்பொருட்களை வடிவமைத்து வழங்கியுள்ளதுடன் சிறந்த வலைப்பின்னல் வடிவமைப்பாளராக (Web Designer) வடமத்திய மாகாணத்தின் முக்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் 30 ற்கும் மேற்பட்ட வலைத்தளங்களை (Web Site) வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில வருடங்களாக வடமத்திய மாகாண சபை காரியாலத்தில் System Administrator ஆக சேவையாற்றியதுடன் அதி நவீன முறையிலான ஒரு மாகாண சபை காரியாலமாக  இலங்கையளவில் அடையாளப்படுத்த மிகப்பெரும் சேவையாற்றிய இவர் வடமத்திய மாகாணத்தில்  எம் சமூகத்தில் இருந்து  தெரிவு செய்யப்பட்ட முதலாவது தகவல் தொடர்பு மற்றும் தொழிநுட்ப சேவைக்குரிய அதிகாரி (ICTS) என்பது குறிப்பிடத்தக்கது.


எமது கலாவெவ  முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவராக பெருமை தேடித்தந்த இவர் கலாவெவ  முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னால் அதிபரான திரு. A.H.சுலைமான் அவர்களின் புதல்வராவார்.

S.M.Akram
Kalawewa
தகவல் தொடர்பு, தொழிநுட்ப அதிகாரியாக தரமுயர்த்தப்பட்ட கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் S.M.ஹலீம். தகவல் தொடர்பு, தொழிநுட்ப அதிகாரியாக தரமுயர்த்தப்பட்ட கலாவெவ  முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் S.M.ஹலீம். Reviewed by Madawala News on 8/02/2017 06:43:00 AM Rating: 5