Kidny

Kidny

நாங்கள் ஒன்றும் மக்கள் பணத்தில் ரொக்கட் விடவில்லை.. நாம் அனுப்பியது கூகுளின் இலவச பலூனையே...


கடந்த அரசாங்கத்தில் சிலர் மக்கள் பணத்தில் ரொக்கட் ஏவினார்கள். ஆனால் நாம் கூகுள் நிறுவனத்தினால் வழங்கப் பட்ட இலவச பலூனையே விண்ணுக்கு ஏவினோம் என டிஜிடல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய சேமிப்பு வங்கியை டிஜிடல் மயமாக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், டிஜிடல் என்ற பதத்தின் விளக்கத்தை நான் தேடிப்பார்த்த போது விரல் நுனியில் செய்யக்கூடிய செயற்பாடுகள் என்று பொருள் கிடைத்தது. அதனை மெய்ப் பிக்கும் வகையில் தான் இன்று அரசாங் கத்தின் அனுசரணையுடன் பொருளாதார செயற்பாடுகள் அனைத்தும் டிஜிடல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

 டிஜிடல் யுகம் என்பதை நான் பிரதிநிதித்துவப்ப டுத்தும் பதுளை மாவட்டத்தில் மஹியங்கன பகுதிக்கு சென்று கூறினால் மக்கள் என்னை கல்லால் அடிப்பார்கள் என்ற நிலையே முன்னர் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாற்றம் கண்டு  கிராம மக்களும் டிஜிடல் யுகத்துடன் முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட டிஜிடல் யுகத்தினை வலுப்படுத்தி யதாலேயே பெரும் பிரபலமான நபராக இன்று மாறியுள்ளார்.

இந்தியாவின் அமைச்சர்கள் சிலரும் கூட டிஜிடல் உட் கட்டமைப்பு வசதிகளை பெருகச் செய்து மக்களுக்கு பெரும் வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் எமது நாட் டிலும் சகலருக்கும் எடுத்துக்காட்டான ஒரு ஜனாதிபதி இன்று இருக்கின்றார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பொரு ளாதார செயற்பாடுகளை முதன் முறையாக டிஜிடல் மயமாக்கி எம்.கேஷ். முறையின் ஊடாக வங்கியில் பணத்தை வைப்பி இன்று முதல் தேசிய சேமிப்பு வங்கி அறிமுகப்பலிடும் முறையொன்றினையும்
டுத்தியுள்ளது. அதனால் மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

இவ்வாறிருக்கின்ற போது நேற்றைய தினம் என்னை சிலர் விமர்சித்திருந்தார்கள். நான் பலூன் விட்டதற்கு விசாரணை நடத் தப்படவில்லை என்றும் தாம் றொக்கட் ஏவியதற்காக தன்னிடத்தில் விசாரணை களை முன்னெடுக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும் நான் மக்கள் பணத்தில் றொக்கட் ஏவவில்லை என்பதையும் கூகுள் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட பலூனை பரீட்சார்த்த ரீதி யிலேயே ஏவியிருந்தோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசிய மாகும்.

மேலும் அவர்கள் றொக்கட் ஏவியபோது செலவிடப்பட்டது இந்நாட்டு அப்பாவி பொதுமக்களின் பணம் என்பதையும் அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒன்றும் மக்கள் பணத்தில் ரொக்கட் விடவில்லை.. நாம் அனுப்பியது கூகுளின் இலவச பலூனையே... நாங்கள் ஒன்றும் மக்கள் பணத்தில் ரொக்கட் விடவில்லை.. நாம் அனுப்பியது கூகுளின் இலவச பலூனையே... Reviewed by Madawala News on 8/17/2017 11:26:00 AM Rating: 5