Kidny

Kidny

தமிழ், சிங்கள, முஸ்லிம் அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை விபரம் இதோ.


நாட்டிலுள்ள தமிழ் சிங்கள அரச பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை நான்காம்  திகதி முதல் மூடப்படுகின்றன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும், நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக சுமார் 1 மாதம் மூடபட்டிருந்தன.

அதனால்  முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இம்மாதம்  18.08.2017  இல் வழங்கப்பட்டு, மீண்டும் மூன்றாம் தவணைக்காக 28.08.2017 இல் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை உயர்தர பரீட்சை நடைபெறும் பாடசாலைகள்    ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 6 வரை மூடப்படும்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை விபரம் இதோ. தமிழ், சிங்கள, முஸ்லிம்  அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை விபரம் இதோ. Reviewed by Madawala News on 8/01/2017 10:53:00 AM Rating: 5