Kidny

Kidny

புத்தளம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல.


புத்தளம் நகரமானது தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. மாறாக பெளத்தர்கள், இந்துக்கள்,
கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி வெளியிடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கும் புத்தளம் நகரம் சொந்தமானது என முன்னாள் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

கே. ஏ. பாயிஸின் எண்ணத்தில் உதயமான, புத்தளம் நகரின் நீண்ட நாள்கனவாக இருந்த 400மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள அல்பா வர்த்தக மையத்திற்கான அடிக்கல்நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமேல் மாகாண முதலை மைச்சர் தர்மசிறி தசநாயக தலை மையில் வியாழக்கிழமை (03) காலை புத்தளம் அல்பா வர்த் தக தொகுதி மைதானத்தில் நடை பெற்ற இந்நிகழ்வை புத்தளம் நகர சபையின் செயலாளர் எம்.எம். நந்தன சோமதிலகவின் வழிகாட்ட லில் புத்தளம் நகர சபை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. கே.ஏ.பாயிஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புத்தளம் நகரம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானது என வீண் கற்பனை செய்து கொண்டு கடந்த காலங்களில் வெளியில் உள்ளவர்களோ அல்லது இங்குள்ளவர்களோ இந்நகரை அபிவிருத்தி செய்வதற்கு முன்வரவில்லை.


எனவேதான் வடமேல் மாகாண நகரங்களில் புத் தளம்நகரம் மிகவும் பின்னடைவை சந்தித்திருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு புத்தளம் நகரம் மிகுந்த அசுத் தமான நகரமாக காணப்பட்டது. போக முடியாத, விருப்பமில்லாத ஒரு நகரமாக புத்தளம் நகரினை முன்னாள் முதலைமைச்சர் இருவர் வர்ணித்துள்ளனர். அப்படியான நக ரமாக இருந்த புத்தளம் நகரினை நாம் 2013 ல் வடமேல் மாகாணத் திலுள்ள 33 நகரங்களில் அதி சுத் தமான நகரமாக வடமேல் மாகாணத்திலேயே முதலிடத்தினை பெருமளவுக்கு மாற்றியமைத் தோம்.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் பயணிக ளுக்கு புத்தளம் நகரின் ரம்மிய மான இயற்கை வளங்கள் கை கொடுக்கின்றன. அதனால்தான் நாம் பாரியதொரு வர்த்தக கேந்தி ரமாக புத்தளம் நகரினை மாற்றிய மைக்க திட்டமிட்டோம்.

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களில் பிரசித்தி பெற்ற ஒரு நகராக புத்தளம் நகரை மாற்றி அமைப்பதற்காகவே நாம் அல்பா, டெல்டா, பீட்டா வர்த்தக தொகுதி களை அமைக்க திட்டமிட்டோம். அதில் ஒன்றான அல்பா வர்த்தக தொகுதிக்கான அடிக்கல் இன்று நாட்டப்படுவதை முன்னிட்டு பெருமையடைகிறேன் எனக்கூறி னார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டி.எம். தாஹிர், வடமேல்மாகாண சபை சபாநாயகர் சிந் தக்க அமல் மாயாதுன்ன, பூரீலங்கா சுதந்திர கட்சின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விக்டர் என்டணி, புத்தளம் மாவட்ட செயலாளர் எச். எம். சித்ரானந்தா உள்ளிட்ட புத்த ளம் பிரதேச செயலாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








புத்தளம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. புத்தளம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. Reviewed by Madawala News on 8/05/2017 10:22:00 AM Rating: 5