tg travels

கடனுக்கு திருமணம் முடித்து, மனைவியை விவாகரத்து செய்வது போன்ற சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை பொறுப்பேற்றோம் .


கடந்த அரசாங்கத்தை போன்று அல்லாது தற்போதைய அரசாங்கம் அனைத்து தரப்பினரும் பயனடையும்வகையில் செயற்பட்டுவருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடனுக்கு திருமணம் முடித்து, மனைவியையும் விவாகரத்து செய்தது போன்ற நிலையிலேயே அரசாங்கம் பிரதமரால் பொறுப்பேற்கப்பட்டது.

அத்தகைய நெருக்கடி நிலையில், அரசாங்கம் நாட்டுக்காக பெரும் சேவையை செய்துள்ளது.
தற்போது நெருக்கடி நிலை மாறி அபிவிருத்தியை நோக்கிய பயணம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 10 லட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.
கடனுக்கு திருமணம் முடித்து, மனைவியை விவாகரத்து செய்வது போன்ற சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை பொறுப்பேற்றோம் . கடனுக்கு திருமணம் முடித்து, மனைவியை விவாகரத்து செய்வது  போன்ற சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை பொறுப்பேற்றோம் . Reviewed by Madawala News on 8/28/2017 02:31:00 PM Rating: 5