Ad Space Available here

மாத்தளை மாவட்டத்தில் மிகப் பழைமையான " மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல்" ஒரு சுவாரஸ்ய பார்வை.

-முகம்மத் அஸ்லம் - (உக்குவளை)

மாத்தளை மாவட்டத்தில் உள்ள மிகத்தொன்மையான பள்ளிவாசல்களில் ஒன்றாக , மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல் கருதப்படுகின் றது. 

இப்பள்ளிவாசல் மாருக்கோண முதியான்ஸே என்பவரால் கட்டப்பட்டது என 1898 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட திரு. ஏ.ஸி.லோறி யின் நூல் கூறுகிறது. 

மாருக்கோன முதியான்ஸே என்பது ஒரு முஸ்லிம்பிரமுகரின் (பரம்பரை பெயர்)

மானாம்பொடைக் குளத்தைக் கட்டியவரும் இவரே என்றபடியால், இவர் ஆட்சி யாளர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவராக இருந்திருக்க வேண் டும் என்பது புலப்படும்.


இப்பிரதேசத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால்தான், இத்தகைய ஒரு செல்வாக்கு முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் என்று கருதுவது பிழையானதல்ல. 

இவ்வாறு மாருக் கோன முதியான்ஸே என்பவருக்கு முன்னரே இப்பகுதியின் மூத்த கிராமமான மாபேரியில் முஸ்லிம்கள் இருந்திருப்பர் என்றால், மாருக்கோன முதியான்லே பள்ளி கட்டுவதற்கு முன்னரே அக்கிராமத்தில் மண்ணால் கட்டப்பட்ட ஒரு சாதாரண பள்ளியாவது இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பலாம்.


1635 ஆம் ஆண்டு மாத்தளை உபராச்சியத்தின் அரசனாக நியமிக்கப்பட்ட விஜயபால மன்னரின் காலத்தில் வாழ்ந்தவர் மாருக்கோன முதியான்ஸே என்பவர். 

எனவே, மாபேரிய ஆரம்ப பள்ளி எவ்வளவு தொன்மையானதாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம். 

ஆரம்ப காலங்களில், மானாம்பொடை, மாருக்கோன, உள்பொத்தபிட்டி, வரக்காமுற போன்ற ஊர்களிலிருந்து மக்கள் ஜும்ஆ போன்ற தொழுகை களுக்கு மாபேரிய பள்ளிக்கே வந்திருக்கின்றனர் என்று மாபேரிய கிராமத்தில் வசிக்கும் பலரும் கூறுகின்றனர்.

 மானாம்பொடை, உள் பொத்தபிட்டி, வரக்காமுற, மாருக்கோன போன்ற ஊர்களில் இருப்பவர்களும் இக்கூற்றை ஏற்றுக்கொள்கின்றனர்.


மாபேரிய பள்ளிவாசல் நிதுல்கஹகொட்டுவ எனும் பகுதிக்கும் மாபேரிய எனும் பகுதிக்கும் இடையே ஒடுகின்ற சுதுகங்கை எனும் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. 

ஏறத்தாழ நாற்பது அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டிருந்த இப்பள்ளிவாசலுக்கு முகப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதாரண ஒரு மண்டபம் போலவே கட்டப்பட்டிருந்தது. 

உள்ளே 'மிம்பர்' எனும் பிரசங்கமேடை அமைக்கப் பட்டிருந்தது. தூண்கள் சுமார் ஐந்து அடி சுற்றளவு உடையனவாகவும் சுவர்கள் இரண்டு அடிஅகலம் கொண்டவையாகவும் இருந்தன. கூரை 'ரட்ட உளு" என்றழைக்கப்பட்ட ஒடுகளினால் வேயப்பட்டிருந்தது.

பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்டிருந்த சலாகைகள், கதவுகள், கதவு நிலைகள் போன்றவை இப்பள்ளிவாசலின் தொன்மையை நிரூபிப்பனவாக இருந்தன. தொழுகைக்கான சுத்தங்களைச் செய்வதற்கு இப்பகுதி முஸ்லிம்கள், பெரும்பாலும் ஆற்றையே பயன்படுத்தியுள்ளனர். 


இதன்காரணமாக சுமார்நாற்பது அடி உயரமானபடிக்கட்டுகளை ஆற்றுக்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் அமைத்துள்ளனர். தனித்தனிக் கற்களால் ஆன இப்படிக்கட்டுகள் இன்றும் உள்ளன. இப்படிக்கட்டும் இப்பள்ளிவாசலின் தொன்மையை உறுதிப்படுத்து கிறது.

புதிய பள்ளிவாசல் புதியதோர் இடத்தில் 1964ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அக்காலத்திலேயே இப்பள்ளியைக் கட்டுவதற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. 

இப்பள்ளிவாசலுக்கு ஊர்மக்களின், அதுவும் விசேஷமாக பெண்களின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாக இருந்திருக்கிறது. அடித்தளம் அமைப்பதற்காக ஊர் ஆண்கள் வெட்டியிருந்த மண்ணை இரவில் பெண்கள் மாத்திரம் போய் நின்று அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.


ஒவ்வொரு வேளையிலும் சமையலுக்காக எடுக்கும் அரிசியில் ஒரு பிடியைச் சேமித்து வைத்து, மாதமுடிவில்..
 சேர்ந்த அரிசி முழுவ தையும் பள்ளிக்குக் கொடுத்து உள்ளார்கள். சகல வீடுகளிலும் இச்சே மிப்பு நடைபெற்று இருக்கின்றது. 

பணத்தால் உதவ முடியாத மக்கள் தென்னை, பலா, கமுகு போன்ற மரங்களையும் வேறு பொருட்களை யும் கொடுத்துதவியுள்ளனர்.

எம்.ஸி.எம்.ஹனீபா ஹாஜியார், ஏ.எம்.ஹாஷிம் ஹாஜியார், எம்.எஸ்.எம்.இப்ராஹிம் ஹாஜியார், எம்.எஸ்.எம்.அப்துல்லா ஹாஜியார் போன்றோர் இப்பள்ளிக்குக் காணிகள் வழங்கி உள்ளனர். 

மாத்தளையில் வாழ்ந்த பெரும் ஆலிம்களில் ஒருவரான மர்ஹஅம் அல்ஹாஜ் ஏ.எம்.முகம்மது இஸ்மாயில் மெளலவி அவர்கள் மாத்தளை நகரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை இப்பள்ளிக்கு 'வக்ப்' செய் துள்ளார்கள். 

இன்றும் மாருக்கோன, பரகஹவெல, நிதுல்கஹகொட்டுவ, மாபேரிய ஆகிய நான்கு கிராமங்களுக்கும் மாபேரிய பள்ளிவா சலே ஜும்ஆ பள்ளியாக பத்து வருடங்களுக்கு முன் விளங்கி வந்தது குறிப்பிட தக்கது

மாத்தளை மாவட்டத்தில் மிகப் பழைமையான " மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல்" ஒரு சுவாரஸ்ய பார்வை. மாத்தளை மாவட்டத்தில் மிகப் பழைமையான  " மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல்" ஒரு சுவாரஸ்ய  பார்வை. Reviewed by Madawala News on 8/09/2017 08:52:00 AM Rating: 5