tg travels

பலபேர் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை போலீசார் களைந்த சம்பவம்... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 85,000 டொலர்களை வழங்க உத்தரவு.


-Razana Manaf-
இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாபை பலபேர் முன்னிலையில் வைத்து பொலிஸ் அலுவலர் ஒருவர் வற்புறுத்தலாக களையவைத்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னிய நகர நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 85,000 டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க நேர்ந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது.

2015ம் ஆண்டு மே மாதம் போக்குவரத்து சமிக்ஞை ஒன்றில் வைத்து பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டி பவல் என அடையாளப்படுத்தப்படும் ஆபிரிக்க - அமெரிக்க இன முஸ்லிம்  பெண்ணின் ஹிஜாபை பொலிஸ் உத்தியோகத்தர் வற்புறுத்தலாக களைய முற்பட்டுள்ளார்.

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் பிரகாரம் இஸ்லாமிய பெண்கள் தலையை மூடுவதென்பது மார்க்கத்தில் குறிப்பிடப்படுள்ள ஒரு பகுதியாகும் இந்த இடத்தில் கிறிஸ்டி பவலின் மத நம்பிக்கையும், அடிப்படை உரிமையும் பல பேர் முன்னிலையில் வைத்து சிதைக்கப்பட்டிருப்பதாக கூறியே த கௌன்சில் ஒன் அமெரிக்கன் இஸ்லாமிக் ரிலேஷன் எனும் அமைப்பினால் பொலிஸ் அலுவலருக்கு எதிராக கலிபோர்னிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் கைதிகளின் விசாரணைகளை பெண் அலுவலர்களே மேற்கொள்ள முடியுமென்றும் பாதுகாப்பு நிமித்தம் கருதி தேவையான பட்சத்தில் ஹிஜாபை களைய பெண் பொலிஸ் அலுவலருக்கே அனுமதி உண்டென்றும் ஆண் பொலிஸ் அலுவலர் ஹிஜாபை களைய முற்பட்டது தவறென்றும் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 85,000 டொலர்களை நஷ்ட ஈடாக செலுத்துமாறு கலிபோர்னிய நகர ஆட்சியாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
பலபேர் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை போலீசார் களைந்த சம்பவம்... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 85,000 டொலர்களை வழங்க உத்தரவு.  பலபேர் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை போலீசார் களைந்த சம்பவம்... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 85,000 டொலர்களை வழங்க உத்தரவு. Reviewed by Madawala News on 8/11/2017 05:02:00 PM Rating: 5