Kidny

Kidny

கொழும்பு - கட்டார் இடையிலான நான்காவது தினசரி விமான சேவை ஆரம்பானது.


கொழும்பு கட்டார், டோஹா ஆகிய நகரங்களுக்கு இடையிலான நான்காவது தினசரி விமான சேவையை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதுவரை கொழும்புக்கும் கட்டாருக்கும் இடையில் மூன்று தினசரி விமான சேவை கள் மாத்திரமே இடம்பெற்று வந்தன.

நேற்று முதல் நான்காவது தினசரி விமான சேவை    ஆரம்பிக்கப்ப ட்டுள்ளதாகவும் இலங்கையிலிருந்து அதிகரித்து வரும் பயனக் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் நான்கு தினசரி விமானங்களுக்கு மேலதிக இன்னும் இரண்டு விமானங்கள் சே வையில் ஈடுபடவுள்ளதாகவும் கட்டார் எயார்வேல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தெற்காசியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான கொழும்பில் எங்கள் சேவைகள் மற்றும் திறன்கள் என்பவற்றை அதிகரிப்பதன் மூலம் மிதமான ஓய்வுப் பயணங்கள் மற்றும் வணிகப் பயணத் தேவைகள் போன்றவற்றைப் பூர்த்தி செய்வது குறித்து நாம் பெருமிதம் அடைகின்றோம் என கட்டார் எயார்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரி வித்துள்ளார்.

கொழும்பு - கட்டார் இடையிலான நான்காவது தினசரி விமான சேவை ஆரம்பானது. கொழும்பு - கட்டார் இடையிலான  நான்காவது தினசரி விமான சேவை ஆரம்பானது. Reviewed by Madawala News on 8/02/2017 04:34:00 PM Rating: 5