tg travels

சிலர் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவே எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.


சட்டமா அதிபர் திணைக்களத்தார் பதவி உயர்வுகளை கவனத்திற் கொண்டு எனதும் எனது குடும் பத்தாரினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்ப டுத்துகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார்.

சாட்சிக் கூறுவதற்கு நான் பயந்து ஒழிவதாக என் மீது ஊடகங்கள் சேறு பூசின.அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே நான் நிரபராதி என்ப
தனை நிரூபிக்க இன்று நான் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு சமூகமளித்தேன்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியங்களுக்காக சமூகமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாகவே இன்று இவர்கள் எம்மை கூண்டில் நிறுத்தி விசாரணை செய்கின்றனர். இதுவே 3 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இதுபோல தட்டிக் கேட் டிருந்தால் வெள்ளை  வேனில் கடத்தப்பட்டிருப்பர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


அமைச்சராக நாட்டுக்கு பாடுபடும் எமக்கென தனிப்பட்ட வாழ்ககையொன்று வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. பிணை முறி சம்பவம் இடம்பெற்றது முதல் என் மீதும் எனது குடும்பத்தார் மீதும சேறு புசுகின்றார்கள்.

நான் நிதி அமைச் சராக இருந்தபோது எப்போதாவது எங்கேயாவது ஒரு சதமேனும் காசு வராமல் போயுள்ளதா? என்பதனை ஆராய்ந்து பாருங்கள்.நான் தூய்மையான முறையில் செயற்பட்டுள்ளேன்.

எதிரியால் எய்தப்படும் அம் பினால் ஏற்படக்கூடிய வலியை தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் நண்பனால் செய்யப்படும் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாது.

உண்மையை மறைக்க முடியாது. அது எப்படியும் ஒரு நாள் வெளியே வரும். அதற்காக நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நானும் எனது குடும்பத்தாரும் வெவ்வெறு தொழில்களை செய் கிறோம். அதனிடையே முடிச்சுப்போட பார்க்கிறார்கள். வெறும் 1990சதுர அடிகளைக் கொண்ட வீட்டுக்கு விசாரணை நடத்துகிறார் கள்.

நாம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னமே பாரிய வீடுகளில் வாழ்ந்துள்ளோம். இந்த விடொன்றும் எமக்கு புதிய வீடல்ல.

எதிர்க் கட்டசியிலிருந்தபோது எமக்கு பாரிய நெருக்கடிகளை கொடுத்தார்கள். இப்போது ஆட்சியிலிருந்து நாட்டுக்காக உழைக்கும்பொதும் எம்மை இருக்க விடுகிறார்கள் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



சிலர் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவே எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். சிலர் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவே எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். Reviewed by Madawala News on 8/03/2017 08:47:00 AM Rating: 5