Ad Space avaiable

பெற்றோர், குழந்தைகளுக்கிடையிலான உறவு !


பெற்றோர்,குழந்தைகளுக்கிடையிலான உறவு சம்பந்தமாக அவதானமாக இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கர்ப்பத்திலிருக்கும் காலத்திலிருந்தே பல்வேறுபட்ட எதிர்பார்ப்பகளுடன் தமது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என தினம் தோறும் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.

குழந்தை பிறந்ததிலிருந்து அதன்மீது அளவுகடந்த அன்பு,பாச மழைகளை அள்ளி இறைப்பார்கள்.இவ்வாறு குழந்தைகள் வளர்கின்ற காலத்தில் ஒவ்வெரு நேரத்திலும் பிள்ளைகளின் வளர்ச்சிப்படிகளை பெற்றோர்கள் தெளிவாக அவாதானிப்பதோடு அவர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும்.

குழந்தைகளுடன் அன்பாக இருப்பதோடு ஆதரவான வார்த்தை பிரயோகங்களை பாவிக்க வேண்டும்.கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்து திருத்த வேண்டும்.தண்டனை உங்கள் அன்பு,பாசத்திலே உருவமெடுக்க வேண்டும்.

பிள்ளைகளை அவர்களுடைய அடிப்படை தேவைகளை சிறுவயதிலிருந்து அவர்களே செய்யும்படி பழக்க வேண்டும்.நல்ல நாவல்கள்,ஆர்வமூட்டும் வரலாற்று கதைகள்,சரித்திர நாயகர்களின் கதை போன்ற புத்தகங்களை வாசிக்க கொடுங்கள்.எந்நேரமும் படிப்பு படிப்பு என ஊர் உலகம் தெரியாமல் புத்தகப்பூச்சியாய் வளர்த்து விடாதீர்கள்.நீங்கள் அறியும் பொது விடயங்கள்,உலக விடயங்களை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.படிப்பு தவிர விளையாட்டு,சமூக சேவை,கலை போன்றவற்றிற்கும் சம முக்கியத்துவம் வழங்குங்கள்.அவர்களை சுயமாக இயங்க விடுங்கள்.சிறுவயதிலிருந்து பிரச்சனைகளை முகம்கொடுக்க திறமையுள்ளவர்களாகவும் அவற்றுக்கு தீர்வு காணக்கூடியவர்களாகவும் பழக்கப்படுத்துங்கள்.
பல விடயங்களுக்கு நீங்கள்தான் அவர்களின் Role model.

இக்காலத்தில் காம வேட்டையர்கள் எங்கும் நிறைந்து உள்ளார்கள்.இக்காலத்தில் யாரையும் நம்ப முடியாது.இவர்களுக்கு ஆண் பெண் பிள்ளைகள்/சிறு பிள்ளைகள் என வேறுபாடில்லை.எமது பிள்ளை சிறியது என அசமந்தமாக இருந்துவிடாதீர்கள்.Nurseryற்கு பிள்ளைகளை இன்னொருவருடன் அணுப்புவதை  கூட சிந்திக்க வேண்டிய காலம்.

கட்டிளமைப்பருவத்தை(Teenage Period)அடையும் வரைக்கும் பிள்ளைகள் முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில்  இருக்கும் எண்ணம் தான் இருக்கும்.
12-18 வயது பகுதி இப்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்க தொடங்கும்.

இதன்போது பாலியல் ஓமோன்களான(Sexual Hormones) ஆண்களில் Testosterone பெண்களில் Progesterone,Oesterogen ஓமோன்களும் அதிகமாக சுரக்க தொடங்கும்.இதன்போது இவர்களின் உடலில்,எண்ணத்தில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படும்.இதனால் எதிர்பால் கவர்ச்சி ஏற்படும்.இக்காலத்தில் தான் பெற்றோர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.இவ்வேளையில் தான் உங்கள் அன்பு,பாசம்,கண்கானிப்பு உச்ச கட்டத்தில் இருக்க வேண்டும்.இதில் குறைபாடு உள்ள போதுதான் இவர்கள் இன்னோருவனிடம்/இன்னோருத்தியிடம் நாடுகிறார்கள்.

பெற்றோர் தாயானவள் ஆரம்பத்திலிருந்தே தமது பெண்பிள்ளைகளுடன் உற்ற தோழி போல் பழக வேண்டும்.பாடசாலையில்,வெளிச்சூழலில் அன்றாடம் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் உங்களிடம் ஒழிவு மறைப்பின்றி சொல்லுமளவிற்கு உங்களில் நம்பிக்கை,பாசமிருக்க வேண்டும்.இக்காலத்தில் நீங்கள்தான் உங்கள் மகளின் சிறந்த நண்பி(Best friend).இவ்வாறே தந்தையும் தமது ஆண்பிள்ளைகளுடன் உறவாட வேண்டும்.


எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நல்ல விடயமென்றால் ஆர்வமழிப்பதோடு ஏதும் பிரச்சனையான விடயமென்றால் உடனே கடுகடுக்காமல் அன்பாக அழகான உதாரணங்கள்,வரலாறுகளை சொல்லி அவற்றை சுட்டி காட்ட வேண்டும்.இன்று பல குழந்தைகள் தமது பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல முடியாது தமக்குள்ளேயே அடைத்து நாளடைவில் மனநோயாளிகளாக மாறுகிறார்கள்.நீங்கள் எவ்வளவு busy என்றாலும் ஒவ்வெரு நாளும் உங்கள் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.அவர்களுடன் ஒன்றாய் அமர்ந்து உண்ணுங்கள்.உங்கள் வேலைப்பழுவை அவர்கள் மீது கொட்டி தீர்க்காதீர்கள்.
இவ்வேளையில் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை.


இன்று அனேக பெண் பிள்ளைகளின் முதலாவது எதிரியாக தாயும்,ஆண் பிள்ளைகளின் முதலாவது எதிரியாக தந்தையும் இன்றைய சந்ததிகள் கருதுகிறார்கள்.

குறிப்பாக உங்கள் தண்டனை,உங்கள் அன்பில் குறைவு இதனால் அவளால்/அவனால் இன்னொரு உறவுக்கு இதை நாடி செல்லவேண்டியுள்ளது.எந்த வேளையிலும் பெற்றோர்கள் அன்பில் குறைவானவர்களாக காட்டகூடாது.இல்லையென்றால் இவர்களின் நிலமையை அறிந்து கொண்டு இன்னோருவர் இவர்கள் மீது அன்பு காட்ட தொடங்குவார்கள.இப்போலியான அன்பிற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பாக இருந்தும் பெற்றோர்களின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தமது பாதையை மாற்றுகிறார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் படும் துன்பத்தை,தியாகத்தை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள்.பிள்ளைகள் பற்றி அடிக்கடி பாடசாலையில்,மேலதிக வகுப்புகள்,வெளிச்சூழலில் இவர்களைப்பற்றி விசாரியுங்கள்.உங்கள் பிள்ளைகள் விடயத்தில் சிலவேளை CIDஆகவும் மாற வேண்டிவரும்.உங்கள் பிள்ளைகள்பற்றி யாராவது ஏதும் சொல்லும்போது என் பிள்ளை இவ்வாறு செய்யமாட்டார்,பொய் சொல்ல வேண்டாம்,பொறமையின் காரணமாக சொல்கிறீர்கள் என உதாசீன படுத்தாது அவ்விடயம் சம்பந்தமாக அவதானத்துடன் இருங்கள்.

வீடு வருகின்ற பிள்ளைகளை அவர்களுக்கு தெரியாமல் அடிக்கடி அவர்களுடைய Bag,pocket என்பவற்றை சோதனை செய்வதோடு அவர்களின் அறை,கட்டில் என எல்லாவற்றையும் சோதனை செய்யுங்கள்.Bathroomஇல் அதிகம் நேரம் செலவழித்தால் இது சம்பந்தமாக கேற்க வேண்டும்.
இக்காலத்தில் முக்கியமாக இவர்களின் நண்பர்களின் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.குறிப்பாக இக்காலத்தில் அமைகின்ற நண்பர்களே இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள்.


 இவர்கள் யாருடன் பழகுகிறார்கள்,எங்கே செல்கிறார்கள் என கவனியுங்கள்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படிக்கும் காலத்தில் Mobile phoneவாங்கி கொடுக்காதீர்கள்.இன்று மாணவ சமுதாயம் இந்த Mobile phoneஇனால் சீரழிந்து கல்வியையும்,வாழ்க்கையையும் இழந்தவர்கள் எத்தனை பேர்.

வீட்டு சூழலை அவர்களுக்கு விருப்பமானதாக மார்க்க விழுமியங்களுக்கு அமைய அமைக்கவேண்டும்.எப்போதும் ஆரம்பத்திலிருந்தே ஆண்மிகத்தை போதிக்க வேண்டும்.ஒவ்வொரு குற்றங்களுக்குறிய தண்டனைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுக்கு முன்னால் திட்ட கூடாது.இன்னோருவருடன் ஒப்பிட்டு ஒருபோதும் தரக்குறைவாக பேசக்கூடாது.உன்னால் குடும்பத்திற்கு பாரம்,நீ உதவாக்கறை என்ற வார்த்தை பிரயோகங்களை ஒருபோதும் பயன்படுத்தகூடாது.எப்போதும் நல்ல வார்த்தைகள் பிரயோகிப்பதோடு அவர்களுக்காக பிராத்தியுங்கள்.நிச்சயம் பெற்றோர்களின் பிராத்தனை இறைவனிடத்தில் திறையின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.நீ நாசமாய் போ,நீ உருப்படமாட்டாய் என்றெல்லாம் ஒருபோதும் சாபமிடாதீர்கள்.அந்நேரம் உங்கள் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாக இருந்தால் நீங்களே உங்கள் குழந்தைகளை புதை குழியில் புதைப்பது போன்றதாகும்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் படிக்கும் போது சரியான திறமைகள் இருந்தும் உங்களை விட்டு பிள்ளைகள் சென்றதன் பின்/உங்கள் விருப்புக்கு அமைய பிள்ளைகளின் நிலமைகள் அமையாதவிடத்து காலம் சென்ற பின் கண்ணீர் சிந்துவதில் அர்த்தமில்லை.இன்று பல பெற்றோர்கள் குழந்தைகளால் ஏற்படுத்தப்படுகின்ற அவமானங்களால் சமூகத்தில் பல்வேறு உயர்மட்டத்திலிருந்த போதும் தலைகுனிய வேண்டிய நிலைவரும்.இவ்வாரான நிலையில் தான் ஏன் இறைவன் எனக்கு குழந்தைகளை தந்தான் என ஏங்கும் பெற்றோர் தான் எத்தனைபேர்.

எனவே குழந்தைகள் இறைவன் தந்த செல்வங்களில் முதன்மையானது.அவர்களை சிறந்த முறையில் வளர்த்து அவர்களின் மூலம் இறைவன் எங்களுக்கு கண் குளிர்ச்சியை தருவானாக!

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.
பெற்றோர், குழந்தைகளுக்கிடையிலான உறவு ! பெற்றோர், குழந்தைகளுக்கிடையிலான உறவு ! Reviewed by Madawala News on 8/08/2017 12:04:00 PM Rating: 5