Ad Space Available here

உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களின் வெறியாட்டம்.


உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களால் துன்புறுத்தப்படும் எமது  உம்மத்துகள் கலிமா சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக ரோஹிங்கியா முஸ்லிம்களின் பச்சிளம் குழந்தை களையும்,கட்பினித்தாய்மார்களையும், வயோதிபர்களையும் மிருகத்தை விட கேவலமாக கொன்று குவித்துக் கொண்டு, காடுகள்,மேடுகள்,ஆறுகள் என்று பாராமல் துரத்தி அடிக்கும் காவிகளே விளங்கிக் கொள்ளுங்கள் உங்களைப்போன்று எத்தனயோ அநியாயம் செய்த கூட்டங்கலுக்கு என்ன நடந்தது என்பதை வரலாற்று ரீதியாகவும் ஏன் எங்கள் வாழ்நாட்களில் கூட கண்ணால் கண்டு விட்டோம்...

இந்த உலகம் உண்மையான முஸ்லிமுக்கு சோதனைக் களம் தான் அதே நேரம் நீங்கள்  நேர்வழி கிடைக்காமல் மரணித்தால் நீங்கள் இவ் உலகில் எங்கள் உறவுகளைப் போடும் நெருப்பை விட 70 மடங்கு காய்ச்சிய நெருப்பில் என்ரென்றும் உங்கலை படைத்தவன் போடத்தான் போகின்றான் என்பதையும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

இறைவன் படைத்த படைப்பினங்கள் அனைத்துக்கும் மனிதாபமானம் என்ற ஒன்றை வைத்துத்தான் படைத்துள்ளான் ஆனால் உங்கள் விடையத்தில் நாங்கள் கண்ணால் காணும் சித்திரவதைக் காட்சிகளைப் பார்க்கும் போது இரத்தம் கொதிக்கின்றது..அழுகுரல்களையும் , அவலக்  காட்சிகளைப் பார்த்து  செய்வதறியாது இதயம் அழுகிறது. மனிதாபமானம் என்ற ஒன்றை உங்கலுக்கு இறைவன் வைத்து படைக்க மறந்து விட்டானோ என்ற கேள்வி கூட மனதில் எழுகின்றது..

ஐநா சபையும் ,மனிதாபமானம் என்று மார்தட்டி சொல்லும் நாடுகலும்,அறபு இராச்சியங்கள் என்று சொல்லும் அறபு நாடுகளும் கூட இவர்களை மனித இனமாகவே கருதாமல் கண்டும் காணாமல் இருப்பது மேலும் வருத்தம் அளிக்கின்ரது.

எனவே அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே!..
நாம் இப்போது இருந்து கொண்டிருக்கும் புனிதமான துல் ஹஜ் மாத்தின் முதல் சிறப்பான பத்து நாட்களில் இருந்து கொண்டிருக்கின்றோம்.பெருநாள்,குர்பானி,ஹஜ்  என்ற ஒரு வட்டத்துக்குள் சிந்தித்தவர்களாக இருக்கும் நிலையில் எமது ரோஹிங்கயா உறவுகள் அங்கு உயிருக்கு போறாடி எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு மிக மோசமான நிலைப்பாட்டில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 2442. , அத்தியாயம்: 46.

எனவே இப்புனித நாட்களில் தினம் தினம் அவர்கலுக்காக எம் கையில் இருக்கும் ஒரேயொரு ஆயுதமான  துவாப் பிராத்தனையை செய்வோமாக!..

ரோஹிங்கிய சகோதர , சகோதரிகளே !... நீங்கள் வீசேட சொர்க்க வாசிகள் .. ஏனெனில் உங்கலுக்கு சஹீதுகள் பட்டம் கொடுத்து இண்ஷ அல்லாஹ் அதி சிறந்த சொர்க்கத்தில் அல்லாஹ் வைப்பான்.

எல்லாம் வல்ல நாயன் ரோஹிங்கிய முஸ்லிம்களை பொருந்திக் கொள்வதோடு இந்த மனிதத் தன்மையற்ற காட்டு முறான்டிகலுக்கு நேர்வழி என்று ஒன்று இல்லா விட்டால் யா றப்Bபே மிக விரைவில் பாரிய தண்டனையை எங்கள் கண்முன் காட்டுவாயாக!..ஆமீன்.

✍️✍️✍️ முஹம்மது பாஹிர்.....
உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களின் வெறியாட்டம். உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களின் வெறியாட்டம். Reviewed by Madawala News on 8/31/2017 01:34:00 PM Rating: 5