Yahya

இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனச்சுத்திகரிப்பின் விளிம்பில் ரோகிங்கியா முஸ்லிம்கள்.


Muja ashraff 
ரோகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைந்து போவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்து விட்டன. ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு உள்ளாகி வரும் இனமாக ரோகிங்கியா முஸ்லிம்களே அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

கடல் நீர் மட்ட உயர்வு காரணமாக இன்னும் நூறு வருடங்களில் மாலைதீவுகள் அழிந்து போகக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதை போல் எதிர்காலத்தில் ரோகிங்கியா இன மக்களும் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து. மறைந்து போவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்து விட்டதாகவே வரலாற்று ஆசிரியர்களும் எதிர்வு கூறுகின்றனர்.

ரோகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரோகிங்கியா இன மக்கள் மியன்மாரில் ரக்கீன் மாகாணத்திலேயே அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியன்மாரில் சுமார் எட்டு லட்சம் ரோகிங்கியா இனத்தவர் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியன்மாரின் பூர்வீக குடிகள் எனக் கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியன்மாருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறி வருகின்றனர்.

1950-க்கு முன்புள்ள எந்தவொரு பர்மீய ஆவணத்திலும் ரோகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறிவரும் மியன்மாரிய அரசும் இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாகவே கணக்கிட்டு  அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது.

1948-ல்  ஆங்கிலேயர்கள்  மியன்மாரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு ஆட்சியில் அமர்ந்த அரசு ரோகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ராணுவ சர்வாதிகார கும்பல்களால் அம்மக்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதுடன் 1982-ம் ஆண்டு புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு குடியுரிமையும் பறிக்கப்பட்டன. இதன் மூலம் கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதனையும் பெற முடியாத சூழ்நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டனர்.
அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு அவர்களுக்கென்று தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு தங்கள் பகுதியை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல முடியா வண்ணம் சொந்த நாட்டிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
 
2012 மே மாதம் ரோகிங்கியா மக்கள் மீது வண்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. வீடு திரும்பும் ஒரு பௌத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரோகிங்கிய இளைஞர்களை கைது செய்கிறது.

அடிப்படை ஆதாரமற்ற இப்பிரச்சினையை தமக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட பௌத்த மத வெறியர்கள் சில நாட்கள் கழித்து ரோகிங்கிய மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர். அந்த மாதமே ரோகிங்கிய மக்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்படுகின்றது. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன.

மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்ந்தனர் சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ்.

அச்சமும், பீதியும் குடிகொள்ள அந்த மக்களோ தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினர். அதே வருடம் அக்டோபர் மாதமளவில் திரும்பவும் இரண்டாவது அலையாக அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

இந்த முறை அந்த மக்களோ தமது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஆபத்தான கடல் பயணங்களை தேர்ந்தெடுத்து  மலேசியாவுக்கு நகர்ந்தனர். போகும் வழியிலேயே படகுகள் கவிழ்ந்து பலர் மாண்டு போனார்கள். 1.45 லட்சம் ரோகிங்கிய முஸ்லிம்கள் மியன்மாருக்குட்பட்ட பகுதிகளிலேயே சிதறி ஓடி பதுங்கி வாழத்தொடங்கினர். தாய்லாந்து. மலேசியா, பங்களாதேஷ் போண்ற நாடுகளுக்கு தப்பி ஓடியவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் என்றும் இது அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்தன.

மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ஜனநாயகத்தின் தேவதை ஆங்சான் சூகீ அந்த மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தைகூட முன்வைக்கவில்லை 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் ரோகிங்கியாக்கள் தொடர்பான பிரச்சினைகளும் எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பௌத்த இனவெறியர்களையும், அதனால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் ரோகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பீட்டு நோக்கினார். பௌத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ரோகிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு தீவிரம் பெற்ற இக்கொடுமைகள் இன்று முழுமையானதொரு இனச்சுத்திகரிப்பாக மாறி நிற்கின்றது.

ரோகிங்கிய மக்களை மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பதில் முழுமையானதொரு வெற்றியை பெற்றுள்ளது பௌத்த தீவிரவாதம். அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் அங்குள்ள பெரும்பான்மை இன பௌத்த சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர் பௌத்த தீவிரவாத பிக்குகள்.

மதவெறியால் வேட்டையாடப்படும் ரோகிங்கிய மக்கள் தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி இதழுக்கு  வழங்கிய முன்னய செவ்வி ஒன்றில் அசின் விராதென்ற தீவிரவாத பௌத்த பிக்கு ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று அந்த மக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது ”

இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பெரும்பான்மை இன பௌத்த சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இவ்வாறான பௌத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பலின் இனவாத கொள்கையும் ஒருங்கே இணைந்து அரசின் முழு ஆதரவையும் பெற்றுக்கொள்ள பெரும்பான்மை இன பௌத்த மக்களிடமிருந்து ரோகிங்கிய முஸ்லிம்கள் முற்றிலுமாகவே தனிமைப்படுத்தப் பட்டு கொடுமையான முறையில் வேட்டையாடப்படுகின்றனர்.

ஏகனிடம் இருகரம் ஏந்துங்கள் அபயமளித்து பாதுகாக்க கூடியவன் அவன் ஒருவனே.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனச்சுத்திகரிப்பின் விளிம்பில் ரோகிங்கியா முஸ்லிம்கள். இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனச்சுத்திகரிப்பின் விளிம்பில் ரோகிங்கியா முஸ்லிம்கள். Reviewed by Madawala News on 8/29/2017 09:43:00 AM Rating: 5