Ad Space avaiable

சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான க.பொ.த. சாதாரண தர இஸ்லாம் பாட கருத்தரங்கு.


வழமை போல் இந்த வருடமும்  Forum for Education and Moral Improvement (FEMI) - Gintota நிறுவனம் இலங்கையிலுள்ள ஒரே ஒரு சிங்கள மொழி ஷரீஆ கல்வி பீடமான Tanweer Academy , Thihariya உடன் இணைந்து தென்மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளரான திருமதி மதனியா கலீலின் மேற்பார்வையின் கீழ் தென்மாகாணத்திலுள்ள சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான க.பொ.த. சாதாரண தர இஸ்லாம் பாட கருத்தரங்கினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07.08.2017 (திங்கட் கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை கா/ முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்பொர் கூடத்தில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.


எந்தவிதக் கட்டணமும் மாணவர்களிடமிருந்து அறவிடப்படாமல் முழு இலவசமாக நடாத்தப்படும் இக்கருத்தரங்கு குறித்த செய்தியினை தென்மாகாணத்திலுள்ள சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எமது நிறுவனத்தினூடாகவும், தென்மாகாணக் கல்வித் திணைக்களத்தினூடாகவும் கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த பிரயோசனமான கருத்தரங்கில் எமது மாணவர்களை பங்குபெறச் செய்வதற்கு உங்கள் பங்களிப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த முறை எமது கருத்தரங்கில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு எமது நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் தென்மாகாணத்தில் நிறைய முஸ்லிம் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளில் கற்பதோடு அவர்களுக்கு இஸ்லாம் கற்பிக்க தகைமையுள்ள ஆசிரியர்கள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதே ஆகும். சில முஸ்லிம் மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் இல்லாத காரணத்தினால் இஸ்லாம் தவிர்ந்த   வேறு  பாடங்களைக் கூட தெரிவு செய்ய நிர்பந்திக்கப் படுகின்றனர் .

இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவி ஒத்தாசைக்காகவும் மற்றும்  ஏனைய ஏற்பாடுகளைச் செய்யவும் Volunteers ஆக முன்வருபவர்கள் FEMI நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் சகோதரர் MKM  Rasmy அவர்களை 077 706 9485 எனும் இலக்கத்தினூடாக  தொடர்பு கொள்ள முடியும் . குறிப்பாக,


 FEMI நிறுவனத்தினூடாக புலமைப் பரிசில் உதவு தொகை பெறும் தென்மாகாண பல்கலைக் கழக மாணவர்கள் குறித்த தினத்தில் விடுமுறையில் இருந்தால் கட்டாயம் இந்த கருத்தரங்கில் கலந்து உங்கள் பங்களிப்புக்களை வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான க.பொ.த. சாதாரண தர இஸ்லாம் பாட கருத்தரங்கு. சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான க.பொ.த. சாதாரண தர இஸ்லாம் பாட கருத்தரங்கு. Reviewed by Madawala News on 8/02/2017 09:33:00 AM Rating: 5