Kidny

Kidny

சவூதி - கட்டார் இடையில் நல்ல செய்தியை கொண்டு வந்தது புனித ஹஜ்... அல்ஹம்துலில்லாஹ்.



-Razana Manaf-
கடந்த ஜூன் மாதம் முறிவடைந்த கட்டார் - சவூதி அரேபிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நகர்வுகளை தொடர்ந்து இரண்டு மாதங்ககளுக்கும் மேலாக மூடப்பட்டு கிடந்த கட்டார் - சவூதி அரேபிய எல்லையான சல்வா எல்லையை கட்டார் ஹஜ் பயணிகளின் நலன் கருதி சவூதி அரேபியா திறந்து விட சம்மதம் தெரிவித்திருக்கின்றது.

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரும் இரண்டு இறையில்லங்களினதும் பிரதி கட்டுப்பாட்டாளாருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் அவர்களுக்கும் கட்டார் பிரதிநிதியான ஷெய்க் அப்துல்லா பின் அலி பின் அப்துல்லா பின் ஜெசீம் அல்தானி அவர்களுக்கும் இடையில் ஜித்தாவில் அமைந்துள்ள அமைதியில்லத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் இவ்விணக்கம் காணப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரண்டு பிரதிநிதிகளும் கட்டார் - சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் இதுவரை காலமும் பேணப்பட்டு வந்த இராஜ தந்திர உறவுகளையும் இரு நாட்டு மக்கள் இரத்த பந்த உறவுகளாக பழகி வந்ததையும் நினைவு கூர்ந்தும் சிலாகித்தும் பேசியிருந்தனர்.

பன்னெடுங்காலமாக இருந்து வரும் கட்டார் - சவூதி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் திடிரென ஏற்பட்ட விரிசலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட தலைவர்கள் தொடரும் காலங்களில் சுமுகமான உறவை பேணுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் விருப்பங்களை பரிமாறிக்கொண்டனர், இந்த சந்திப்பின் இறுதியில்

இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளவிருக்கும் கட்டார் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சவூதி அரேபியா அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் அதே வேளை, கட்டார் ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி மூடப்பட்டு கிடக்கும் கட்டார் - சவூதி நாடுகளுக்கிடையிலான எல்லையான சல்வா எல்லையையும் திறந்து விட சம்மதம் தெரிவித்துள்ளது, அத்துடன்,

சவூதி அரேபியாவின் உள்ளூர் விமான சேவை நிறுவனங்கள் கட்டார் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கட்டார் ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றி வருவதற்கான அனுமதியையும் சவூதி அரேபிய அரசு வழங்கியுள்ளது. கிங் பஹத் சர்வதேச விமான நிலையம், மற்றும் அல் அஹ்சா சர்வதேச விமான நிலையம் ஆகிய இரு விமான நிலையங்களும் கட்டார் ஹஜ் யாத்திரிகர்களை கையாளும்.

இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் கோவை மன்னர் சல்மான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டிருப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன, இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் இராஜ தந்திர நகர்வுகள் மிகவும் புத்திக்கூர்மையாக இருப்பதாக அவ்வூடகங்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

தற்போது கட்டாரின் ஹஜ் பயணிகளுக்காக திறக்கப்பட்டிருக்கும் சல்வா எல்லை எதிர்காலத்தில் கட்டார் - சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளினதும் உறவை மேலும் திறந்து விட இது ஒரு முக்கிய வழிகோலாக அமைந்திருப்பதாக கருதப்படுகின்றது
சவூதி - கட்டார் இடையில் நல்ல செய்தியை கொண்டு வந்தது புனித ஹஜ்... அல்ஹம்துலில்லாஹ்.  சவூதி - கட்டார் இடையில் நல்ல செய்தியை கொண்டு வந்தது புனித  ஹஜ்... அல்ஹம்துலில்லாஹ். Reviewed by Madawala News on 8/17/2017 10:42:00 AM Rating: 5