Ad Space Available here

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன.


கிழக்கு காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் தலையீடு செய்து நியாயம் பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் நான் தலையிடும் நிலை உருவாகியுள்ளது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விஹாரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

1980 ஆம் ஆண்டு வரை இருந்த சொத்துக்கள் மற்றும் காணிகள் என அனைத்தும் கொள்ளை அடிக்கப்படு கின்றன.

இதனை தடுப்பதற்கான தேவை எழுந்துள்ளது. வாழைச்சேனை மீராவோடை பகுதி யிலுள்ள தமிழ் மக்களின் கிராமத்தில் விசேடமாக மைதானத்தில் நிர்மாணிக் கப்பட்ட வீடுகளைப் போன்று அந்த கிராம மக்களின் சுவர்ணபூமி உறுதிப்பத் திரமுள்ள காணிகளுக்குள் அநாவசியமாக சில முஸ்லிம் அமைப்புகள் உள்நுழைந்து அந்த கிராம மக்களுக்கு விளைவிக்கும்
இடையூறுகள் தொடர்பில் கடந்த மாதம் தெரியப்படுத்துவதற்கு முயற்சித்தேன்.


அன்று தொடக்கம் இன்று வரை மாவட்ட செயலாளர் அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், வாழைச் சேனை பிரதேச செயலாளர், திருகோண மலை காணி ஆணையாளர் என அனைத்து அதிகாரிகளையும் இந்த மாதத்திற்குள் நான்கு தடவைகள் நான் சந்தித்துள்ளேன்.


எனினும் சாதாரண பதில் கூட அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் தலைவர்களின் விருப்பங் களை நிறைவேற்றுவது மாத்திரமே இங்கு நடைபெறுகின்றது.

இது கீழ்மட்டத்திலுள்ள அப்பாவி மக்கள் உருவாக்கும் பிரச்சினை அல்ல.இது அரசியல் தலைவர் களால் உருவாக்கப்படும் பிரச்சினை என் பது மிகத் தெளிவாக எமக்கு தெரிகின்றது.

கல்லடியில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் இடம் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் வீடு களை நிர்மாணிப்பதற்கென குறிப்பிட்ட ஏக்கரை ஒதுக்குவதென அமைச்சர் ஹிஸ் புல்லாவினால் உறுதிப்படுத்தப்படுகின் றது.அங்கு இருந்த தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுமதியை கொடுக்கின்றனர்.

ஏனைய அரச அதிகாரிகளும் அனுமதியை கொடுக்கின்றனர். இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் பகுதி தமிழர்கள் பிரதேசம். அந்த பகுதியில் முஸ்லிம் மக்களுக்கான கிராமமொன்றை அமைக்கும் இந்த பிரச்சினை குறித்து அரசியல் தரப்பிற்கும் அரச நிர்வாக தரப் பிற்கும் கூறுவதற்கும் முடியாத பட்சத்தில் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரு மாறு எம்மிடமே வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களில் இவ்வாறான பிரச்சினைகளில் தலையிடும் போது நாங்கள் முன்னிலையாகும் போது இதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.இதில் இனவாதம் இல்லை. மதவாதம் இல்லை. என்பதை  நாடு பூராகவும் உலகத்திலும் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக் களுக்கு கூற விரும்புகின்றேன்.

அரச தலைவர்களும் அரச அதிகாரி களும் ஒன்றிணைந்து 24 மணித்தியாலத் திற்கு தீர்வு காணக் கூடிய பிரச்சினை. இது அப்பாவித் தமிழர்கள் வந்து ஆர்ப் பாட்டம் செய்வதற்கும் சத்தமிடுவதற்கும் கோரிக்கை விடுப்பதற்குமான பிரச்சினை அல்ல.

அவர்களுக்கு சுவர்ணபூமி உறுதிப் பத்திரம் கைகளில் உள்ளது. அத்துடன் இந்த உறுதிப்பத்திரத்தை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலகம் மற்றும்டு ம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு முறைப்பாடும் விசாரணை  செய்யப்படவில்லை.

அப்பாவி மக்களும் சென்று முறைப்பாடு செய்துள் ளனர்.எந்தவொரு முறைப்பாடும் விசா ரணை செய்யப்படவில்லை. அவ்வாறாயினும் இதற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும்.?

பொறுப்புக்கூறவேண் டியவர்கள் முன்னிலையாகி ஏனைய அரச அதிகாரிகளும் முன்னிலையாகி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் வாரத்திற்குள் கிழக்கு மாகா ணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் மாத்திரமல்ல நாடுபூராகவும் பரந்து வாழும் தமிழ் மக்களுடன் கலந்து ரையாட திட்டமிட்டுள்ளோம்.

இந்த மக் களின் அடிப்படைத் தேவைகள் குறித்து எந்தவொரு தலைவர்களும் இல்லாத கார ணத்தால் தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தலைவர்கள் இல்லாத காரணத்தால் எங்களிடம் வந்து அவர்கள் கூறுகின்ற போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்கள் 30 வருடகால யுத்தத்தின் பிடியில் இருந்த மக்கள்.
வடக்கு, கிழக்கில் உலகில் எந்தபகுதியில் வாழும் யார் வேண்டுமானாலும் இதனை ஆராய்ந்து பார்க்க முடியும்.வடக்கு கிழக்கில் சுயாட்சி ஈழம் கோரி போராடிய வர்களே தமிழ் மக்கள். எனினும் தற்போது தமிழ் மக்களுக்கு என்ன நடந்துள்ளது?

அவர்களின் பிரச்சினை தெய்வத்திற்கு கூட கேட்காத ஒன்றாக மாறியுள்ளது. அறு கம்பை தொடக்கம் பொத்துவில் தொடக் கம் மறுபுறம் மூதூர் தோப்பூர் வரை தொடர்ச்சியாக ஒரே நகரமாக மாற்றுவதற்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு முடிந்துள்ளது என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன. Reviewed by Madawala News on 8/15/2017 02:19:00 PM Rating: 5