Kidny

Kidny

ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை ஹாஜிகளுக்கு பிரியாவிடை !



ஐக்கிய இராச்சிய கல்ஹின்னை நலன்புரி சங்கம, ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்துடன் இணைந்து கடந்த வருடங்களைப் போன்று  இந்த வருடமும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஹஜ்ஜுக்காகப் புறப்பட இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகளுக்கு  வழி காட்டல் நிகழ்ச்சியும் பிரியாவிடையும் ஹெரோ இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் 13ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2017ல்  ஏற்பாடு செய்திருந்தது.


இந்நிகழ்ச்சியில்  அஷ் செய்க்  அப்துர் ரஹ்மான் ஹஸ்கிக் அவர்கள் ஆங்கிலத்திலும் அஷ் செய்க் அல ஹாபிள் ஷபீக் மௌலவி அவர்கள் தமிழிலும் ஹஜ் உம்ரவின் சிறப்புகள் பற்றியும் மக்கா மதீனாவிலுள்ள புனிதத் தலங்களின சிறப்புகள் பற்றியும் ஹஜ் கடமையின் அவசியம் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.

அத்துடன் ஹஜ்  வழிகாட்டலில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த அல்ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்கள் ஹஜ் செய்யும் முறை பற்றியும் அவரது சுமார் நான்கு தசாப்த்த கால ஹஜ் அனுபவங்கள் பற்றியும் விரிவாக விளக்களித்தார்கள்.

அல் ஹாஜ் இல்ஹாம் இக்பால் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில்  ஜக்கிய இராச்சியத்தை சேர்ந்த இலங்கை ஹாஜிகளை ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்பட்டு  கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  இந் நிருவனத்தால் இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

இந்த வருடம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுமார் எழுபது இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தயாராகி இருக்கிறார்கள.;; லண்டனில் இலங்கை  முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் முன்னணி ஹஜ் உம்ரா நிருவனமான சுது வுசயஎநடள ரூ வுழரசள  குழுவைச் சேர்ந்த அனேகமான ஹாஜிகள்  இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.   ஐக்கிய இராச்சியத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஹாஜிமார்கள் இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சந்தித்து ஸலாம் கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களது ஹஜ் பிரயாணத்தை இலேசாக்கி அதை கபூலாக்கி உயர்தரமான சுவனத்தை கூலியாக நல்குவானாக!

தகவல்:

குளோபல் தஃவா சேவை - இலண்டன்
ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை ஹாஜிகளுக்கு பிரியாவிடை ! ஐக்கிய இராச்சியத்தில்  இலங்கை ஹாஜிகளுக்கு பிரியாவிடை ! Reviewed by Madawala News on 8/16/2017 06:59:00 AM Rating: 5