Yahya

தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அமைச்சரவையில் அங்கம் வகித்ததை வெட்கமாக கருதுகிறேன்.


தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதைவிட வெட்கப்படக்கூடிய வேறு விடயங்கள் எதுவும் இல்லை என்றே எனது மனச்சாட்சிக்குப் புலப்படுகிறது.

மேலும் தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் எவ்வகையான தீர்மானம் எடுக்கவுள்ள னர் என்பது தொடர்பில் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். எனது இரு அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நான் விலகவில்லை.

 என்னை விலக்கியுள்ளனர் என்று பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ் ராஜபக்ஷ தெரிவித்தார். விஜேதாஸ் ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்கியதையடுத்து அவர் நேற்று பிற்பகல் அமைச்சிலிருந்து வெளி யேறினார். அப்போது அமைச்சு அதிகாரிக ளிடமிருந்து விடைபெறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பதவிவகித்த நீதியமைச்சர்கள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங் களுக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர் பிலான குற்றச்சாட்டே இருந்து வந்தது. எனினும் குறித்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் எமது நாட்டின் அரசியல மைப்பை அமைச்சரவை மீறியுள்ளது.


அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரைக் கமைவாக அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகள் தொடர்பிலான யோசனை முன்வைக்கும் போது அதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அத்தி யாவசியமாக இருக்க வேண்டும். எனவே அதற்குப் புறம்பாக செய்யப்பட்டுள்ள அம் பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை வெறும் கடதாசியளவிலேயே உள்ளது.

ஆகவே அந்த உடன்படிக்கை சட்டத்திற்கு முரணானதாகும். அந்த உடன்படிக்கை விவகாரம் தொடர் பிலான யதார்த்தத்தை நான் வெளிப்படுத் தினேன். அதன் பின்னர் சில குழுக்கள் எனக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முனைந்தன. மேலும் அம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் ஆரம்பித்து மத்தள விமான நிலையம் வரையில் சில நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதைவிட வெட்கப்படக்கூ டிய வேறு விடயங்கள் இல்லை என்றே எனது மனதுக்குப் புலப்படுகிறது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் நான் அமைச்சுப் பதவி களை பொறுப்பேற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர சாங்கத்தில் ஐந்து மாதங்கள் மாத்திரம் அமைச்சுப் பதவி வகித்து, பின்னர் அதிலிருந்து விலகினேன்.

மேலும் நல்லாட்சி அர சாங்கத்தில் அமைச்சுப் பதவியிலிருந்து என்னை விலக்கியுள்ளதாகவே தற்போது பேசுகின்றனர். அத்துடன் பண்டுகாபய மன்னரின் ஆட்சி முதல் இன்று வரையான காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரும் மோசடியாக அமைந்திருப்பது மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய மோசடியேயாகும்.


அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தமை யினால் அதனுடன் தொடர்புடையவர்களின் விபரம் வெளிவர ஆரம்பித்துள்ளது.

ஆகவே அதன் பிரதான சூத்திரதாரிகளும் குறித்த மோசடியை மூடி மறைப்
பதற்கு முன்நின்றவர்களின் பெயர்களும் வெளிவரவுள்ள நிலையில் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆகவே நீதியமைச்சரை நீக்கிவிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் வினைத்தி றன்மிக்க செயற்பாடுகளையும் முடக்குவ தற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அதற்கிணங்கவே கடந்த 15 ஆம் திகதி சட்டமா அதிபரை அலரி மாளிகைக்கு வரவழைத்து அவரை நிந்தித்தது மாத்திரமல்லாது, "அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரின் வழக்குகளை இரு வாரங்களுக்குள் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு” கேட்டுக் கொண்டுள்ளனர்.

விஜேதாஸ் ராஜபக்ஷ முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுடன் "டீல்" செய் துகொண்டு குறித்த வழக்குகளை தாமதப் படுத்துவதாக் குறிப்பிட்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை இருட்ட டிப்பு செய்வதற்கு முனைகின்றனர்.

இவ் வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப் பவர்களில் அதிகமானோர். 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலி ருந்து நான் வெளியேறியபோது அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்களேயாவர்.

தற்போது எனக்கெதிராக இவ்வாறான குற்றச் சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

நான் அங்கம் வகித்த சகல ஆட்சிகளிலும் தேசிய வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராகவே குரல் கொடுத்துள்ளேன். அவ்வாறு சூறையாடப்பட்டவைகளையும் நாட்டுக்காக மீட்டுக்கொடுத்துள்ளேன். எனவே தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் எவ்வகையான தீர்மானம் எடுக்க வுள்ளனர் என்பது தொடர்பில் அவதானி த்துக்கொண்டிருக்கிறேன்.


மேலும் எவன்காட் விவகாரம் தொடர்பில் எனக்கெதிராக குற்றச்சாட் டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் அது தொடர்பில் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என முன்னாள் சட்டமா அதிபர் யுவன்ஜன் விஜயதிலக தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு அறிக்கையின் பிர காரம் குறித்த விடயத்தில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் எவன்காட் விவகாரம் தொடர்பில் ஏதாவது சட்டநடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் முதலில் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் தற் போதைக்கும் கடற்படை, எவன்காட் கப்பலில்தான் துப்பாக்கிகளை களஞ்சி யப்படுத்துகிறது. தற்போதும் ஐநூறுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் அங்கு களஞ்சி யப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அவ்வி வகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் முதல் பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப் புக்கூற வேண்டும். எனவே குறித்த மோசடி சம்பந்தமாக எனக்கெதிராக குற்றச்சாட்டு முன்வைக்க எவருக்கும் அதிகாரமில்லை.


எனது எதிர்கால அரசியல் நடவடிக்கை கள் தொடர்பில் பின்னர் தெரிவிக்கவுள் ளேன். மேலும் எனது இரு அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நான் விலகவில்லை. என்னை விலக்கியுள்ளனர்.

தற்போதைய நிலையில் அப்பதவியில் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்றார்.

தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அமைச்சரவையில் அங்கம் வகித்ததை வெட்கமாக கருதுகிறேன். தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அமைச்சரவையில் அங்கம் வகித்ததை வெட்கமாக கருதுகிறேன். Reviewed by Madawala News on 8/24/2017 11:14:00 AM Rating: 5