Kidny

Kidny

விஜயதாஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு.


(எம்.சி.நஜிமுதீன்)
ஐக்கிய தேசியக் கட்சியானது தேசிய சிந்தனை கொண்டவர்களுக்கு இடமளிக்கும் கட்சியோ அல்லது பெளத்த சிந்தாந்தம் கொண்ட கட்சியோ அல்ல. அவ்வாறான கொள்கை கொண்டவர்களுக்கு எதிரான கட்சியாகும்.

ஆகவேதான் அமைச்சர் விஜயதாஸவிற்கு எதிராக நம் பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முற்படுவதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.


பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ராஜகிரியவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் விஜயதாஸ் ராஜபக்ஷவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் நம் பிக்கையில் லாப்பிரேரனை  கொண்டுவரவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அந் ந டவ டிக்கையினை மூன்று பெளத்த பீடங்கள் எதிர்ப்பதாக நேற்று (நேற்றுமுன் தினம்) தெரிவித்திருந்தன.

எனவே அமைச்சர் விஜயதாஸ் ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கம் நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எத்தணிப்பதற்கான பின்னணி தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

எமக்கு கிடைத்த தகவலின்படி, ஐஸ்.ஐஸ். தீவிரவாதிகளுடன் இலங்கையிலுள்ள சிலருக்கு தொடர்பிருப்பதாக அமைச்சர் விஜயதாஸ் ராஜபக்ஷ ஏற்கனவே பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் நாட்டில் சில முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டி ருந்தார். எனவே அமைச்சர் விஜயதாஸ் ராஜபக் ஷ அவ்வாறு கருத்து தெரிவித்ததன் பிரதி பலனாகத்தான் அவருக்கு எதிராக அடிப் படைவாத குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிலர் நம்பிக்கையில்லாப் பிரே ரணையை கொண்டுவருவதற்கு முற்படு கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியானது தேசிய சிந் தனைகொண்டவர்களுக்கு இடமளிக்கும் கட்சியோ அல்லது பெளத்த சித்தாந்தம் கொண்ட கட்சியோ அல்ல.

அவ்வாறான கொள்கைகொண்டவர்களுக்கு எதிரானதே ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆகவேதான் அவ்வாறான சிந்தனை கொண்டவர்க ளுக்கு எதிராக அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்துமாறோ அல்லது தாமதப்படுத்துமாறோ கட்டளையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

ஏனெனில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட வேண் டும். அதற்கு இடமளித்தால்தான் அது நல் லாட்சியாகும். அதனைவிடுத்து அமைச் சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்க ளினதும் தேவைகளுக்காக நீதித்துறையும் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்படும்.

 எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்ப டுத்துகின்றனர்.

இவ்வாறான செயற்பா டுகள் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மையை இல்லாது செய்ய முற்படுகின்றனர். ஆகவே இவ் வாறானவர்களுக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு குந்தகமான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதில் பிர தான விடயமாக நாட்டில் சிங்கள பெளத்த தலைவர்கள் தலைதூக்குவதை அரசாங்கம் விரும்பவில்லை. ஆகவே அவ் வாறான தலைவர்களின் தோற்றத்தை அவதானிக்கும் போதே அவர்களை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது என்றார்.
விஜயதாஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு. விஜயதாஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு. Reviewed by Madawala News on 8/16/2017 10:57:00 AM Rating: 5