Kidny

Kidny

இரு காரணங்களுகாக சிசுவை கர்ப்பத்திலேயே கலைக்க அனுமதி. பாராளுமன்றில் சட்டம்.


தாய் வயிற்றில் இருக்கும் குறை வளர்ச்சியடைந்த சிசு மற்றும் வன்புணர்வின் மூலம் கர்ப்பம் தரிக்கப்பட்ட சிசுவை கலைப்பதற்கு அனுமதி வழங்கும் சட்டம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் டொக்டர். கபில ஜயரட்ண தெரிவித்தார்.

கொழும்பு சுகாதார கல்விப் பணியகத்தில் நேற்றுக் காலை22 நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை ஏற்கனவே வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய வைத்தியர், பாராளு மன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப் பட்டதும்
மேற்படி காரணங்களுக்காக தமது சிசுவை கலைப்பதா அல்லது தொடர்ந்தும் சிசுவை வயிற்றில் சுமப்பதா என்ற தீர்மானத்தை குறித்த தாய் மேற்கொள்ள முடியும்,
 எனினும் இதற்கான சிபாரிசு அர சாங்க ஆஸ்பத்திரிகளிலே வழங்கப் படுமென அவர் மேலும் குறிப்பிட் டார்.

தாய் கர்ப்பம் தரித்து சுமார் 20 வார நிறைவில் குழந்தையின் வளர்ச்சி தொடர்பில் டொக்டர்களால் கண்டறியக் கூடியதாக இருக்கும். மரபணு ரீதியாக குறைபாடுடைய சிசுவை சுமந்து பெறுவதற்காக தாய் சகல துன்பங்களையும் அனுபவிக்கும், அதேநேரம் வாழ்க்கை முழுவதும் அப்பிள்ளையால் பாரிய துன்பங்க ளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.

எனவே இச்சட்டத்தை நிறைவேற்று வதன் மூலமாகவே தாயும் பிள்ளை யும் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினை களுக்கு தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இரு காரணங்களுகாக சிசுவை கர்ப்பத்திலேயே கலைக்க அனுமதி. பாராளுமன்றில் சட்டம். இரு காரணங்களுகாக சிசுவை கர்ப்பத்திலேயே கலைக்க அனுமதி. பாராளுமன்றில் சட்டம். Reviewed by Madawala News on 8/23/2017 09:37:00 AM Rating: 5