Kidny

Kidny

மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு சிறைத்தண்டனை. #இலங்கை



இளம் வயதுடைய (3) சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் குற் றத்தை ஏற்றுக்கொண்ட குற்றவாளி ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்ற நீதவான் நிமல் ரணவீர இரு வருடங்களுக்கு கடுழிய சிறைத் தண்டனையும், 5000 ரூபா தண்டம் பணமும் விதித்ததுடன் பாதிக்கப் பட்டவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் தீர்ப் பளித்துள்ளார்.

இச்சிறைத் தண்டனை 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளதுடன் இக்குற்றத்தைச் செய்தவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராகும்.

இவர் 2013 செப்டம்பர் 2 ம் திகதி இக்குற்றத்தை புரிந்துள்ளது டன் பொலன்னறுவை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வயதுடைய சிறுமி ஒருவரையே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில் இவர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டமையினால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு சிறைத்தண்டனை. #இலங்கை மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு சிறைத்தண்டனை. #இலங்கை Reviewed by Madawala News on 8/02/2017 12:34:00 PM Rating: 5