Kidny

Kidny

இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம். தாய் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு. தந்தை கைது.



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அச் சிறுமிகளின் தந்தையை காத்தான்குடி பொலிசார் (24) வியா ழக்கிழமை கைது செய்துள்ளனர்.

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தி லுள்ள 5வயது மற்றும் 4வயது சிறுமிகளை அந்த சிறுமிகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த சிறுமிகளின் தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை காலை முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதையடுத்து இதனை விசாரணை செய்து வரும் காத்தான்குடி
பொலிசார் குறித்த சிறுமிகளின் தந்தையை கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாயும் தந்தையும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த தந்தை பிள்ளைகளை அழைத்துச் சென்று பிள்ளைகளுக்கு பாலியல் துஷ்பிர யோகம் செய்துள்ளதாக தாய் அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமிகள் இருவரும் தங்களுக்கு தந்தை பாலியல் துஷ்பிர யோகம் செய்ததாக தாயிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


அந்த சிறுமிகள் இருவரும் தமக்கு நடந்த சம்பவத்தை காத் தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய இடத்திற்கு சென்று விசாரணை களை செய்துள்ள காத்தான்குடி பொலிசார் சிறுமிகளின் தந்தையான அலியார் முகம்மட் இல்யாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வரு வதுடன் சிறுமிகள் இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனையை செய்யவும் நட வடிக்கை எடுத்துள்ளதாக காத்தான் குடி பொலிசார் தெரிவித்தனர்.


இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம். தாய் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு. தந்தை கைது. இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம். தாய் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு. தந்தை கைது. Reviewed by Madawala News on 8/26/2017 09:36:00 AM Rating: 5