Ad Space avaiable

குஜராத்தில் மோடி அரசின் சகல சதிகளையும் முறையடித்து வெற்றி பெற்ற முஸ்லீம் வேட்பாளர் அஹமது பட்டேல்.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

குஜராத் தேர்தலில் சிலர்  முறைகேட்டில் ஈடுபட்டு பாஜகவை வெற்றி பெற செய்ய முயற்சி மேற்கொண்ட நிலையிலும் காங்கிரஸ் வேட்பாளர் அஹமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்யப்பட வேண்டிய எம் பி தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அஹ்மத் பட்டேலைத் தோற்கடிக்க அமித்ஷா தரப்பு காங்கிரஸ் எம் எல் ஏக்களில் இருவரை தம்வசப்படுத்தியது.

வாக்களிக்கும் முன்னர் அந்த இரு காங்கிரஸ் எம் எல் ஏக்களும் தாம் பாஜகவுக்கு வாக்களித்தாக வாக்கு சீட்டை  அமித்ஷாவுக்குக் காட்டினர். அதனை வாக்கு பெட்டியில் போட அமித்ஷா கூறியதைத் தொடர்ந்து வாக்கு பெட்டியில் தம் வாக்குகளைப் போட்டனர்.

தெளிவாக வீடியோ பதிவு செய்யப்பட்ட இக்காட்சியினைத் தேர்தல் கமிசன் முன்னிலையில் காங்கிரஸ் சமர்ப்பித்தது. அக்காட்சியினைப் பரிசோதித்து உறுதிபடுத்திய தேர்தல் கமிசன், வாக்களிக்கும் முன்னர் தம் வாக்கை எதிர்கட்சி தலைவருக்குக் காட்டியது சட்ட விரோதம் எனக்கூறி அவ்விரு ஓட்டுகளையும் தள்ளுபடி செய்தது.

இதனால் 45 வாக்குகள் பெற்றாலே வெற்றி என்ற நிலையில் இருந்த காங்கிரஸுக்கு 44 வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற ஜாக்பாட் அடித்தது. அதே சமயம், பாஜகவின் தரப்பிலிருந்த பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம் எல் ஏ, பட்டேல் சமூகத்துக்கு எதிரான பாஜகவுக்கு எதிராக அதற்குப் பாடம் புகட்ட தாம் காங்கிரஸுக்கு வாக்களித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அஹ்மத் பட்டேல் வெற்றி உறுதியானது.

அமித்ஷாவா அஹ்மத் பட்டேலா என்ற விதத்தில் இத்தேர்தல் பாஜகவுக்குக் கவுரவப் பிரச்சனையாக மாறிய நிலையில், அஹ்மத் பட்டேலின் வெற்றி உறுதியாகியுள்ளது பாஜகவுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரவுடிசம் செய்தாவது அஹ்மத் பட்டேல் வெற்றி அறிவிப்பைத் தேர்தல் கமிசனை அறிவிக்க விடாமல் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டது. எனினும் அஹமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5வது முறையாக மாநிலங்களவைக்கு செல்கிறார் அஹமது படேல்.

. பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். இருப்பினும் பல்வந்த் சிங் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் வெற்றிபெற்ற ஒரே ஒரு முஸ்லீம் எம்பி அஹமது பட்டேல் என்பது முக்கிய அம்சமாகும்
குஜராத்தில் மோடி அரசின் சகல சதிகளையும் முறையடித்து வெற்றி பெற்ற முஸ்லீம் வேட்பாளர் அஹமது பட்டேல். குஜராத்தில் மோடி அரசின் சகல சதிகளையும் முறையடித்து வெற்றி பெற்ற முஸ்லீம் வேட்பாளர் அஹமது பட்டேல். Reviewed by Madawala News on 8/09/2017 11:14:00 AM Rating: 5