Ad Space avaiable

உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரை இறங்குகிறது.. கட்டுநாயக்க விமான தளத்தை கேந்திரமாக கொண்டு புதிய விமான சேவைகளும் ஆரம்பம்.


இலங்கையின் விமானச்சேவை வரலாற்றில் முதன் முறையாக ஒகஸ்ட் 14ம் திகதி உலகின் மிகப் பெரிய எயர் பஸ் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கஉள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கூறினார்.

கொழும்பு மற்றும் டுபாயை இணைத்து புதிய விமானசேவை யொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் ஆறு எயார் பஸ் விமான சேவைகள் கட்டுநாயக்க விமான தளத்தை கேந்திரமாக கொண்டு போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (08) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இவ்விடயங்களை அவர் கூறினார்.

பதிய விமான ஒடுதளம் திறக்கப்பட்ட பின் பாரிய விமானமொன்று தரையிறங்குவது இது தான் முதற்தடவை எனவும் கூறினார்.

45 மீற்றர் அகலமான ஒடு பாதை தற்போது 75 மீற்றராக அகலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 3335 மீற்றர் நீளமான ஒடுபாதை யின் எயார் பஸ் விமானத்தை தரையிறக்குவது இலகுவானது எனவும் அவர் கூறினார். ஆசிய நாடுகளிடையே விசேட ஒடுதளம் உடைய இலங்கை விமான
நிலையம் குறித்து அநேகமான நாடு களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

 அதன் காரணமாக பெருமளவிலான உல்லாசப் பிரயாணிகள் இங்கு வரவுள் ளார்கள்.

அதன் காரணமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்க முடியு மென பிரதி அமைச்சர் கூறினார்.

ஒகஸ்ட் 14ம் திகதி மாலை 4.10 க்கு எயார் பஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளதாக அவர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரை இறங்குகிறது.. கட்டுநாயக்க விமான தளத்தை கேந்திரமாக கொண்டு புதிய விமான சேவைகளும் ஆரம்பம். உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரை இறங்குகிறது..  கட்டுநாயக்க விமான தளத்தை கேந்திரமாக கொண்டு புதிய விமான சேவைகளும் ஆரம்பம். Reviewed by Madawala News on 8/09/2017 10:59:00 AM Rating: 5