Kidny

Kidny

கெக்கிராவையிலிருந்து அக்குறணைக்கு லொறியில் மாட்டிறைச்சி கடத்தல். நீண்டகால சூட்சும கடத்தல் முறியடிப்பு.


கெக்கிராவையிலிருந்து, அக்குறனைக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 174 கிலோ மாட்டிறைச்சி ஏற்றிச்சென்ற லொறியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக, மாத்தளை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் திலகவர்த்தன தெரிவித்தார்.

 பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலொன் றையடுத்து உக்குவளை மாபேரி பொலில் காவலரண் அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, 174 கிலோ மாட்டிறைச்சி மற்றும் மாடுகளின் சில உடற்பாகங்கள் என்பவற்றைக் கைப்பற்றியதுடன், அக்குறணையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் இரு வரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இச்சட்ட விரோத மாட்டிறைச்சி க் கடத்தல் வியாபாரம் மிகவும் சூட்சுமமாக, திட்டமிட்ட முறையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்திருப்ப தாகக் குறிப்பிட்ட பொலிஸார் எவரும் சந்தேகம் கொள்ளாதிருக்கும் விதத்தில், லொறியின் முன்புறக் கண்ணாடியில் புத்த சரணய் (புத்த பெருமானின் அருளுடன் ) என்ற வாசகத்துடனான ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

லொறியைப் பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் குறித்த தட யப் பொருட்களுடன் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிலார் மேற் கொண்டு வருகின்றனர்.
கெக்கிராவையிலிருந்து அக்குறணைக்கு லொறியில் மாட்டிறைச்சி கடத்தல். நீண்டகால சூட்சும கடத்தல் முறியடிப்பு. கெக்கிராவையிலிருந்து அக்குறணைக்கு லொறியில் மாட்டிறைச்சி கடத்தல். நீண்டகால  சூட்சும கடத்தல் முறியடிப்பு. Reviewed by Madawala News on 8/04/2017 10:39:00 AM Rating: 5