Kidny

Kidny

துபாய் அல் குர்ஆன் போட்டியில் இறுச்சுற்றுக்கு தெரிவாகிய கம்பளை முஹம்மத் அர்ஹமுடன் ஒரு சந்திப்பு.

 
 -எம்.எம்.எம்.ரம்ஸீன்-
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் துபாய் செம்பர் எனும் அமைப்பினால் நடைபெற்ற அண்மையில் சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் இறுச்சுற்றுக்கு தெரிவாகிய கம்பளை ஆண்டியாகடவத்தையை சேர்ந்த முஹம்மத் அர்ஹம் (வயது 15) இப்போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவரை மடவளை நியுசுக்காக சந்தித்த போது,

நான் எனது பன்னிரண்டாவது வயதில் இருந்து புனித அல்குர்ஆனை மனனமிட ஆரம்பித்தேன். ஆல்லாஹ்தஆலாவின் உதவி மற்றும் எனது ஆர்வம்  காரணமாக ஒரு வருடத்தில் குர்ஆன் முழுவதையும்;  மனனமிட்டுக் கொள்ள முடிந்தது. இந்த அதீத ஆர்வம் சிறு வயதில் எனக்கு ஏற்பட்டதாகும்.

நான் கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் போது ஒரு தடவை எனது வகுப்பாசிரியையான பெரும்பான்மை இன ஆசிரியை எம்மிடம் எமது இலட்சியங்களைப் பற்றி வினவினார். 

அவர் என்னிடம் வினவிய போது நான் ஒரு ஹாபிழாக வர விரும்புவதாக தெரிவித்தேன்.  இதனைப் பற்றி போதிய விளக்கமில்லாத அவர் அது பற்றி முஸ்லிம் ஆசிரியையொருவரிடம் கேட்டு தெளிவு பெற்று மகிழ்ச்சியடைந்துள்ளார். 

என்னை இப்பணியில் வழி நடாத்தியவர்கள் நான் கல்வி பயிலும் உடுநுவர தஸ்கர ஹக்கானிய்யா அரபுக்கலாசாலை அதிபர் மௌலவி எம்.எச்.எம். லபீர் மற்றும் உஸ்தாத்மார்களுமாவர். 

எனது பெற்றோர் எப்போதும் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்கள் எனது ஆசைப்படி என்னை அரபுக் கல்லூரியில் சேர்த்தனர். மேலும், எனது பெற்றோர் எனது சகோதரர்கள் இருவரையும் அரபுக் கல்லூரியில் சேரத்துள்ளனர். அவர்களும் நன்றாக ஓதி வருகின்றனர்.


எனது வீட்டு சூழல் கல்விக்குப் பொருத்தமான சூழழாக அமைந்துள்ளது. எனது பெற்றோர் எம்மை தேவையின்றி வெளி இடங்களுக்கு அனுப்புவதில்லை. 

எமது ஒழுக்க விடயங்களில் மிகவும் கண்டிப்பானவர்களாவர். இதனால் சிறு வயது முதல் சிறந்த சூழலில் வளரக்கப்பட்டேன். இது எனக்கு சந்தோசத்தை தருகின்றது.

சர்வதேச குர்ஆன் போட்டியில் முதலாமிடம் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மேலும், நான் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய போது பலரும் அங்கு என்னை அப்படித்தான் வாழ்த்தினார்கள். ஆனால் அல்லாஹ்வின் ஏற்பாடு கிடைக்கவில்லை. நான் இதனால் உற்சாகமிழக்கவில்லை. மீணடும் ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் 
நிச்சயம் முயற்சிப்பேன். 

ஆதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நான் இப்போட்டியில் பங்குபற்றியதை அறிந்த பலரும் எனக்கு  ஆர்வமூட்டினார்கள்.

 நான் நாடு திரும்பியதும் கம்பளை பெபிள பள்ளிவாசலில் வரவேற்பு வழங்கினார்கள். எமது ஊர்ப்பள்ளிவாசலில் பரிசுகள் வழங்கினார்கள். இதனால் எனக்கு மகிழ்ச்சி. என்னை பள்ளிவாசல்களில் கிராத் ஓதுவதற்கும் தொழுகைகள் நடாத்தவும் அழைத்தார்கள்.


எனது தற்போதைய இலட்சியம் நான் எதிர்காலத்தில் மார்க்கத்தை நன்கு கற்ற ஒரு முப்தியாக வர வேண்டும். இதன் மூலம் நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
 


 

துபாய் அல் குர்ஆன் போட்டியில் இறுச்சுற்றுக்கு தெரிவாகிய கம்பளை முஹம்மத் அர்ஹமுடன் ஒரு சந்திப்பு. துபாய் அல் குர்ஆன் போட்டியில் இறுச்சுற்றுக்கு தெரிவாகிய கம்பளை முஹம்மத் அர்ஹமுடன் ஒரு சந்திப்பு. Reviewed by Madawala News on 8/13/2017 04:19:00 PM Rating: 5