Ad Space avaiable

இரு சகோதரர்களுக்கு இடையில் கைகலப்பு. விலக்கச் சென்ற மூன்றாம் நபர் இரும்புக்கம்பியால் அடிவாங்கி பலி .

பொலன்னறுவை ஆரிப் எஸ்.நளீம்



 காணித்தகராறு காரணமாக அடித்துக்கொண்ட  சகோதரர்களுக்கிடையே சமரசம் செய்யச் சென்ற மூன்றாவது நபர் மீது இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார்.

நேற்று பொலன்னறுவைப் பிரதேசத்திலுள்ள புதூரில் காணிப்பிரச்சினை காரணமாக இரு சகோதரர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது, இரும்புக்கம்பியால் ஒருவரையொருவர் தாக்க முற்பட்ட வேளையில், அதனை விலக்கச் சென்ற மற்றொரு நபர் மீது தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில், பின்னர் மரணித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சிங்களச் சகோதரர்களுக்கு இடையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இரு சகோதரர்களுக்கு இடையில் கைகலப்பு. விலக்கச் சென்ற மூன்றாம் நபர் இரும்புக்கம்பியால் அடிவாங்கி பலி . இரு சகோதரர்களுக்கு இடையில் கைகலப்பு. விலக்கச் சென்ற மூன்றாம் நபர் இரும்புக்கம்பியால் அடிவாங்கி பலி . Reviewed by Madawala News on 8/08/2017 12:51:00 PM Rating: 5