Kidny

Kidny

ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களுக்கு சுகம் வேண்டி துஆப் பிரார்த்தனை .


(அஸ்ரப் ஏ சமத்)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சுகவீனமுற்று கொழும்பு தனியார் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 3 நாட்களாக அனுமதிக்;கப்பட்டுள்ளார்.

நேற்று  (28) அசர் தொழுகையின் பின்னர் கொழும்பு தெவட்டஹா பள்ளிவாசலில் சுகம்  வேண்டி   மெலவி பாருக் மக்கி துஆப் பிரார்த்தனை நாடாத்தினார்.

  தெவட்டஹா பள்ளிவாசல் தலைவர் றியாஸ் சாலி அஸ்வர் ஹாஜியாரின் புதல்வர்கள்,  முஸ்லீம் லீக் வாலிப முன்னணி முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் மற்றம்  உறவினர்களும்  கலந்து கொண்டனர்.
ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களுக்கு சுகம் வேண்டி துஆப் பிரார்த்தனை . ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களுக்கு   சுகம்  வேண்டி துஆப் பிரார்த்தனை . Reviewed by Madawala News on 8/29/2017 08:57:00 AM Rating: 5