Kidny

Kidny

விஜே­தாஸ ராஜ­பக்ஷ பதவி விலகியவுடன் ராஜ­ப­க்ஷக்கள் மீதான விசா­ர­ணைகள் தீவி­ர­ம­டையும்.


(எம்.ஆர்.எம்.வஸீம்)

விஜே­தாஸ ராஜ­பக்ஷவின் வில­க­லுடன் ராஜபக்ஷ குடும்­பத்­துக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­படும். ராஜபக்ஷ குடும்பம் தவ­று­செய்யவில்லை என்றால் விசா­ர­ணை­க­ளுக்கு அஞ்­சத்­தே­வை­யில்லை என தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

கடந்த அர­சாங்க காலத்தில் ராஜபக்ஷ் குடு­பத்­தாரின் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு இருந்­தன என்று நாட்டு மக்­க­ளுக்கு தெரியும். இவர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு நீதி அமைச்­சரின் அழுத்­தமும் இருந்து வந்­துள்­ளது. இதனால் நீதி அமைச்­சுக்கு பொருத்­த­மான ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு நாங்கள் அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­தி­ருந்தோம்.

அத­ன­டிப்­ப­டையில் விஜே­தாச ராஜ­பக்ஷ்வின் நட­வ­டிக்­கையில் அதி­ருப்தி கொண்ட ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழு அவரை அந்த பத­வியில் இருந்து நீக்­க­வேண்டும் என தீர்­மா­னித்­துள்­ளது. அதன் பிர­காரம் விஜே­தாச ராஜபக்ஷ் பதவி வில­கு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. அத­னால்தான் ராஜபக்ஷ் குடும்பம் தற்­போது அச்­ச­ம­டைந்து ஊட­கங்­களில் பொய் பிர­சா­ரங்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­துள்­ளது. அத­னால்தான் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்­வ­தற்கு முன்னர் அர­சாங்கம் தன்னை கைது­செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் 6 மாதங்கள் சிறை­யி­ல­டைக்­கப்­போ­வ­தா­கவும் நாமல் ராஜபக்ஷ் தெரி­வித்து வரு­கின்றார்.

அத்­துடன் விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் நட­வ­டிக்­கையால் மக்கள் அர­சாங்­கத்தின் மீது விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­காமல் விஜே­தா­சவே தடுத்து வந்­துள்ளார். தற்­போது விஜே­தா­சவின் விலகல் உறு­தி­யா­கி­யுள்­ளதால் மோசடி காரர்கள் உலர ஆரம்­பித்­துள்­ளனர். ராஜபக்ஷ் குடும்பம் நேர்­மை­யாக ஆட்சி செய்­தி­ருந்தால் விசா­ர­ணை­க­ளுக்கு ஏன் அச்­சப்­ப­ட­வேண்டும்.

மேலும் அர­சாங்கம் தற்­போது தவ­று­களை திருத்­திக்­கொண்டு பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. அதனால் அர­சாங்­கத்தை ஒரு­போதும் வீழ்த்த முடி­யாது. அதன் ஆரம்­ப­மா­கவே மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணையில் ரவி கரு­ணா­நா­யக்க ராஜி­னாமா செய்­துள்ளார். அதற்­காக அவர் தவ­று­செய்­துள்ளார் என்று தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­களின் இறு­தி­யிலே குற்­ற­வா­ளிகள் யார் என்று தீர்­மா­னிக்­கப்­படும். அத்­துடன் இந்த பிணை­முறி மோச­டியில் இன்னும் பலர் தொடர்பு பட்­டி­ருக்­கின்­றனர். குறிப்­பாக அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவை ஆணைக்­குழு விசா­ரணை நடத்­த­வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு.

அத்துடன் தற்போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் குறித்த அமைச்சுப்பதவியில் இருந்து விலக்கப்படவுள்ளார். இவ்வாறான நிலையில் அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக்கொண்டு பயணிக்க ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என நம்புகின்றோம்.
விஜே­தாஸ ராஜ­பக்ஷ பதவி விலகியவுடன் ராஜ­ப­க்ஷக்கள் மீதான விசா­ர­ணைகள் தீவி­ர­ம­டையும். விஜே­தாஸ ராஜ­பக்ஷ பதவி விலகியவுடன் ராஜ­ப­க்ஷக்கள் மீதான விசா­ர­ணைகள் தீவி­ர­ம­டையும். Reviewed by Madawala News on 8/23/2017 03:14:00 PM Rating: 5