Kidny

Kidny

ஏகப்பட்ட தங்கத்துடன் பங்களாதேஷ் பொலிஸாரிடம் சிக்கிய கடத்தல்காரர்.. பங்காளியின் சூட்சுமம் இம்முறை பலிக்காமல் போனதே...


விசேட தேவையுள்ளவர் போன்று பாசாங்கு செய்து சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 25 கிலோ தங்கத்தை தனது தொடைப் பகுதியில் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபர் ஒருவர் விமான நிலைய அதிகாரி களிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பங்களா தேஷில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஜமீல் அக்தர் என்ற மேற்படி நபர் சக்கர நாற்காலியே தஞ்சமென்று வாழ்கின்ற நிலையிலும் இந்த வருடத்தில் 13 தடவைகள் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதை கண்ட றிந்து சந்தேகம் கொண்ட டாக்கா விமான நிலையத்திலிருந்த அதிகாரிகள், அவரை தீவிர பரிசோதனைக்குட் படுத்திய போதே மேற்படி கடத்தல் நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

அவரால் கடத்தப் பட்ட தங்கத்தின் பெறுமதி 1.5 மில் லியன் அமெரிக்க டொலராகும். இது இந்த வருடத்தில் பங்களாதேஷில் ஒரு தடவையில் கண்டுபிடிக்கப் பட்ட அதிகளவு தொகையான கடத்தல் தங்கமாக கருதப்படுகிறது.

அந்த நபர் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயற் சித்துள்ளார். உலகில் தங்கத்தை அதிகளவில் உப யோகிக்கும் நாடான இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு கடும் வரிகள் அறவிடப்ப டுவதால் அந்நாட்டுக்கு சட்டவிரோ தமான முறையில் தங்கத்தைக் கடத்து வது அதிகரித்து வருகிறது. பங்களாதேஷ் விமான நிலையங்களில் கடந்த 3 வருட காலப் பகுதியில் 1.5 தொன் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.




ஏகப்பட்ட தங்கத்துடன் பங்களாதேஷ் பொலிஸாரிடம் சிக்கிய கடத்தல்காரர்.. பங்காளியின் சூட்சுமம் இம்முறை பலிக்காமல் போனதே... ஏகப்பட்ட தங்கத்துடன்  பங்களாதேஷ் பொலிஸாரிடம் சிக்கிய கடத்தல்காரர்.. பங்காளியின் சூட்சுமம் இம்முறை பலிக்காமல் போனதே... Reviewed by Madawala News on 8/08/2017 03:18:00 PM Rating: 5