tg travels

தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி


ARA FAREEL 

கிழக்கில் உத­ய­மா­க­வுள்ளதாக கூறப்படும் முஸ்லிம் கூட்­ட­மைப்பில் தூய முஸ்லிம் காங்­கிரஸ் என்ற பெயரில் புதிய அர­சியல் கட்­சி­யொன்று உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.


இதற்­கான நட­வ­டிக்­கை­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் உட்­பட பலர் இறங்­கி­யுள்­ளனர். 


தற்­போது கிரா­மங்கள் தோறும் செயற்­குழு உறுப்­பி­னர்­களை உள்­வாங்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அம்­பா­றையில் இந்­ந­ட­வ­டிக்கை நடை­பெற்­று­வ­ரு­கி­றது. 


அடுத்­த­வாரம் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் இச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்பு ஒரு மாத­கா­லத்தில் பொது­மா­நாடு நடாத்­தப்­பட்டு கட்­சியின் உத்­தி­யோ­கத்­தர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 


இது தொடர்பில் எம்.ரி.ஹசன் அலி விளக்­க­ம­ளிக்­கையில்; தூய முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்கு தலைவர் ஒருவர் இருக்­க­மாட்டார். தலை­மைத்­துவ சபையே இயங்கும். யாப்பு; குர்ஆன், ஹதீஸை அடிப்­ப­டை­யாகக் கொண்டே வரை­யப்­படும். செய­லாளர் பதவி வகிப்­பவர் தொடர்ந்து பல காலம் அப்­ப­த­வியில் இருக்­க­மாட்டார். இப்பதவிக்கு ஒவ்வொரு முறையும் ஒருவர் நியமிக்கப்படுவார். செயலாளர் பதவி நியமனத்தை கட்சியின் உயர்பீடமே தீர்மானிக்கும் என்றார்.

தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி Reviewed by Madawala News on 8/04/2017 07:43:00 AM Rating: 5