Kidny

Kidny

திருடர்களே இல்லாத ஒரு அரசாங்கத்தை காட்டமுடியுமா ?


வரலாற்றில் எப்போதும் திருடர்கள் இருந்துள்ளதாகவும் திருடர்களே இல்லாத ஒரு அரசாங்கத்தை காட்டமுடியுமா என என அமைச்சர் பைசர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போயு ரவி கருணாநாயாக்க தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்து பதிலளித்த பைஸர் முஸ்தபா..

அமைச்சர் ரவி கருணாநாயக்கா தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியாது.எமது கட்சியின் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விவாதிக்க முடியும் எதிர்வீட்டு பிரச்சினையில் நாம் எவ்வாறு தலையீடுவது என அமைச்சர் பைசர் முஸ்தபா கேள்வி எழுப்பினார் இந்த அரசாங்கத்தில் மாத்திரமல்ல சகல அரசாங்கத்திலும் கள்ளர்கள் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருடர்களே இல்லாத ஒரு அரசாங்கத்தை காட்டமுடியுமா ? திருடர்களே இல்லாத ஒரு அரசாங்கத்தை காட்டமுடியுமா ? Reviewed by Madawala News on 8/03/2017 09:45:00 PM Rating: 5